தினமும் பழைய சோறு குடிப்பவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான ஒரு குட் நியூஸ்!

0
65

தினமும் பழைய சோறு குடிப்பவர்களா நீங்கள்? அப்போ இது உங்களுக்கான ஒரு குட் நியூஸ்!

பழைய சோறு என்றால் முகம் சுளிக்கும் நபர்களே அதன் மகத்துவம் தெரிந்தால் இனி அதை தவிர்க்காமல் எடுத்து கொள்வீர்கள்.காரணம் இதில் உள்ள சத்துக்கள் உடலின் அனைத்து பாதிப்புகளையும் குணமாக்கும் தன்மை கொண்டது.முந்தின நாள் மீதமான சத்தத்தை தண்ணீரில் ஊறவைத்து அடுத்த நாள் அவை நொதித்து வந்த பின்னர் நீர் ஆகாரமாக பருகும் பழக்கம் நம் முன்னோர்களிடையே காணப்பட்டது.ஆனால் காலப்போக்கில் இந்த பழக்கம் குறைந்து பழைய சோறு என்றால் என்ன என்பதே பலரும் மறக்கும் நிலை உருவானது.

இந்நிலையில் தற்பொழுது இதன் மகத்துவம் மீண்டும் மக்களிடையே தெரியவந்ததை அடுத்து இதனை அதிகளவு பணம் கொடுத்து வாங்கி பருகும் நிலையானது ஏற்பட்டு உள்ளது.

1.நொதிக்க வைக்கப்பட்ட பழைய சோற்றில் அதிகப்படியான அளவு வைட்டமின் டி உருவாகிறது.இது நம் உடல் சோர்வை போக்குவதோடு வயிற்றில் இருக்கும் அமிலத் தன்மை உயராமல் பார்த்துக் கொள்கிறது.

2.இந்த நீராகாரத்தை தொடர்ந்து உண்டு வந்தோம் என்றால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.இது அல்சர்,குடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்சனைகளை போக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுகிறது.

3.இவற்றை காலை நேரத்தில் பருகுவதால் தலைமுடி மற்றும் சரும பிரச்சனைகள் நீங்கி அழகை மேம்படுத்தும்.இவை உடலை வலுவாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

4.சமீபத்திய அமெரிக்க ஆய்வுகள் உலகிலேயே மிக ஆரோக்கியமான காலை உணவு பழைய சோறு என்று கூறுகிறது.இந்த பழைய சோற்றில் 21 மடங்கு மடங்கு இரும்புச்சத்து கிடைக்கிறது.

5.இவற்றில் இருக்கும் வைட்டமின் பி வயிற்றில் உருவாகியுள்ள புண்களை ஆற்றி அல்சரை விரைவில் குணப்படுத்துகிறது.இந்த நெதிக்க வைக்கப்பட்ட சாதம் அதிகளவு நுண்ணுயிரிகளையும்,நுண்ணூட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது.இவற்றை தொடர்ந்து உணவாக எடுத்து வரும்போது உடலின் பிஎச் அளவு மேம்படுகிறது.

6.இதில் அதிகப்படியான வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதினால் இவை தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டுகிறது.

7.நன்கு நொதித்து காணப்படும் பழைய சாதத்தில் அதிகப்படியான செலீனியம் மற்றும் மெக்னீசியம் காணப்படுகிறது.இவற்றை பருகுவதினால் எலும்புகள் வலுவாகும்.