உதயநிதியால் கலையப்போகும் கூட்டணி.. அடிமேல் அடி சறுக்கும் திமுக!! இனி கட்டுமரம் மிதக்க வாய்ப்பே இல்லை!!

0
552
He deliberately left us in the campaign.
He deliberately left us in the campaign.

உதயநிதியால் கலையப்போகும் கூட்டணி.. அடிமேல் அடி சறுக்கும் திமுக!! இனி கட்டுமரம் மிதக்க வாய்ப்பே இல்லை!!

தேர்தல் வந்துவிட்டாலே பிரச்சாரத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைவரும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டி கொள்வதையே வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஒரே ஒரு செங்கலை வைத்து அனைத்து மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்தார்.இதனால் இவருக்கு செங்கல் மன்னன் என்று கூட பெயர் சூட்டலாம்.

அந்த அளவிற்கு அவரது பிரச்சாரமானது மக்களிடம் கொண்டு சென்றது.அதே போல தற்போது நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலிலும் தனது பேச்சு திறமையை ஒவ்வொரு மாவட்டத்திலும் காட்டி வருகிறார்.சட்டமன்றத் தேர்தலை தொடர்ந்து தற்போதும் அந்த செங்கலை தூக்க ஆரம்பித்து விட்டார்.

இது குறித்து எதிர்க்கட்சி உள்ளிட்ட அனைவரும் கேலி செய்ய ஆரம்பித்துவிட்டனர். இவருக்கு அரைத்த மாவை தான் அரைக்க தெரியும் போல என்று கூறுகின்றனர்.  வாக்கு சேகரிப்பில் தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர் மற்றும் அவர்களது நிர்வாகிகளின் பெயரை தனித்துவமாக குறிப்பிடுவதை வழக்கமாக ஒன்றாக வைத்துள்ளார்.

ஆனால் இந்த தர்மபுரி பிரச்சாரத்தின் பொழுது வேட்பாளரின் பெயரை மட்டும் கூறிவிட்டு கூட்டணி கட்சி நிர்வாகிகளின் பெயரை கூறவில்லை.இதனால் அக்கட்சியானது உதயநிதி மீதி பெரும் அதிருப்தியில் உள்ளது.இது குறித்து கேட்கையில், உதயநிதி தெரியாமல்  நிர்வாகிகளின் பெயரை கூறாமல் இருந்திருப்பார் என கட்சி ரீதியாக கூறுகின்றனர்.ஆனால் இது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி என்பதால் அவர்களுடைய பெயர்களை குறிப்பிடாமல் இருந்திருக்கலாம் என்று பலரும் கூறுகின்றனர்.

Previous articleஇந்த காரணத்திற்காக தான் கோவில் கட்டினார்.. நடிகர் விஜய் குறித்து நெகிழ்ந்த தாய்..!!
Next articleகாவிரியை தாரைவார்க்க துணிந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்!!