அவர் போதை பொருள் போன்றவர்!! சென்னை வீரர் குறித்து தோனி புகழாரம்!! 

Photo of author

By Amutha

அவர் போதை பொருள் போன்றவர்!! சென்னை வீரர் குறித்து தோனி புகழாரம்!! 

Amutha

He is like a drug!! Dhoni praises the Chennai player!!

அவர் போதை பொருள் போன்றவர்!! சென்னை வீரர் குறித்து தோனி புகழாரம்!! 

என் வாழ்நாளில் அவரை முதிர்ந்த நபராக பார்க்க மாட்டேன் என சென்னை வீரர் தீபக் சாகர் பற்றி தல டோனி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவரைப் பற்றி கூறுகையில் அவர் இங்கு இல்லை என்றால் எங்கே உள்ளார் என்று நினைப்பீர்கள் எனவும் தெரிவித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியில் கூல் கேப்டன் என்று அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் டோனி. கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான தோனி மற்றும் அவரது மனைவி சாஷி இருவரும் இணைந்து தமிழில் லெட்ஸ் கெட்ஸ் மேரிட் என்ற திரைப்படத்தை தயாரித்து உள்ளனர்.

இந்த சூழ்நிலையில் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கேப்டன் டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் குறித்து கருத்து தெரிவித்தார்.

தீபக் பற்றி பணி கூறுகையில் தீபக் போதை பொருள் போன்றவர். அவர் இங்கு இல்லை என்றால் அவர் எங்கு உள்ளார் என்று நீங்கள் நினைப்பீர்கள். அவர் இங்கு இருந்தால் அவர் ஏன் இங்கு இருக்கிறார் என்று நினைப்பீர்கள். இது நல்ல விஷயம் என்னவென்றால் தீபக் முதிர்ச்சி அடைந்த நபராகி வருகிறார். ஆனால் அவருக்கு சில காலம் தேவைப்படுகிறது. இதில் உள்ள பிரச்சனை என்னவென்றால் எனது வாழ்நாளில் தீபக் சஹாரை முதிர்ந்த நபராக நான் எப்போதும் பார்க்க மாட்டேன் என்று ருசிகர கருத்து தெரிவித்தார்.