திமுகவின் கஜானாவை நிரப்ப இவர் சரியானவர் அல்ல!! டிஜிபி யை ஒதுக்கும் முதல்வர்!!

0
87
#image_title

திமுகவின் கஜானாவை நிரப்ப இவர் சரியானவர் அல்ல!! டிஜிபி யை ஒதுக்கும் முதல்வர்!!

திமுக முக்கிய பதவிகளில் தனக்கு ஆதரவாகவும் நெருக்கமாகவும் உள்ளவர்களை மட்டுமே எப்பொழுதும் அமர வைக்கும். அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய இரண்டு பேர் ஓய்வு பெற உள்ள நிலையில் இவர்களை வேறு எந்த நிர்வாகத்தில் அமர வைக்கலாம் என்பதில் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது.

குறிப்பாக கலைஞர் இருந்த போதிலிருந்தே நல் மதிப்பை பெற்ற சைலேந்திரபாபுவை உயரிய பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதே ஸ்டாலின் அவர்களின் திட்டம். அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்க படலாம் என்று ஒரு சில மாதங்களுக்கு முன்பாகவே கோட்டை வட்டாரங்களில் பேச்சுக்கள் எழுந்தது.

ஏனென்றால் இவர் அவ்வபோது அரசு தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு பயிற்சி அளித்து வந்ததும் இதற்கு ஒரு காரணம் என்று கூறலாம். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த பதவிக்கு இறையன்போ நோ சொல்லிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இதற்கு மாறாக டிஜிபி சைலேந்திரபாபு இந்த பதவிக்கு ஆசைப்படுவதாக கூறுகின்றனர். காவல்துறையின் தலைவராக உள்ள டிஜிபி சைலேந்திரபாபு இம்மாதம் ஓய்வு பெற இருக்கிறார். எனவே இந்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவிக்கு இவர் தற்போதையிலிருந்தே ஆர்வம் காட்டி வருவதாக கூறுகின்றனர்.

ஆனால் தலைமைக்கு டிஜிபியை அமர வைப்பதில் பெரும்பாலும் விருப்பமில்லையாம். இறையன்புவை போல டிஜிபி செயல்பட மாட்டார் என்ற குறைகள் இருப்பதால் தலைமை இது குறித்து சற்று யோசிக்க உள்ளதாம்.

அதேபோல டிஜிபியின் செயல்பாடுகளும் தற்பொழுது வரை பேசும் பொருளாக எதுவும் இருந்தது இல்லை என்றும் அவரது வேலைகளில் துரிதமாக எதுவும் செயல்படவில்லை இவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்த பொறுப்பை கொடுத்தால் மட்டும் எப்படி நிர்வகிப்பார் என்பதில் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது.

அதுமட்டுமின்றி ஆளும் கட்சியானது முக்கிய பொறுப்புகளில் தனக்கு மிக நெருக்கமானவர்களை அமர வைப்பதற்கான காரணம் தங்களது கல்லாவை கட்டுவதற்கு தான். ஏனென்றால் இவ்வாறு நெருக்கமானவர்கள் தான் முதல்வர் கஜானாவை நிரப்ப உதவி புரிவர்.

மற்றவர்கள் அவர்களுடைய கஜானாவை நிரப்பிய பிறகு தான் கணக்கு வழக்குகள் அனைத்தும் முதல்வர் பார்வைக்கு செல்லும். இதை வைத்துப் பார்க்கையில் டிஜிபி தனது கல்லாவை கட்டிய பிறகு தான் தலைமை செயலகத்திற்கு கணக்கை எடுத்து செல்வார்.

இதுவே இறையன்புவாக கஜானா நிரப்ப எளிமையாக இருக்கும் என்றும் அனைத்தும் வெளிப்படத் தன்மையோடு காணப்படும் என கூறுகின்றனர்.

ஆனால் இந்த பதவிக்கு இறையன்பு ஒப்புக்கொள்ளாததால் டிஜிபிக்கு வாய்ப்புள்ளதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.