பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!

0
136
#image_title

பரபரப்பான 5வது நாள் ஆட்டம்!! முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா!!

 

ஆஷஸ் டெஸட் தொடரின் முதல் டெஸ்ட்டில் பரபரப்பான 5வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்று 1-0 என்று முன்னிலையில் உள்ளது.

 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜூன் 16ம் தேதி பிர்மிங்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 393 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 118 எடுத்தார். ஆஸ்திரேலிய அணியில் முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சில் லயன் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

 

393 ரன்கள் பின்னிலையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 386 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக உஸ்மான் க்வாஜா 141 ரன்களும் இங்கிலாந்து அணியில் பந்துவீச்சில் பிராட், ராபின்சன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 7 ரன்கள் முன்னிலையில் இர்ணடாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலிந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணிக்கு 281 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

 

281 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 5வது நாள் ஆட்டத்தில் பரபரப்பாக விளையாடியது. இங்கிலாந்து அணி வெற்றி பெற வேண்டும் என்று சிறப்பாக பந்து வீசியது. எனினும் பரபரப்பான 5வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 282 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் திரில் வெற்றி பெற்றது.

 

முதல் இன்னிங்ஸில் சதம் அடித்து 141 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடிதது 65 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவிய உஸ்மான் க்வாஜா ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் ஆஷஸ் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 1 – 0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலையில் உள்ளது. இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி ஜூன் 28ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கவுள்ளது.