தளபதி 68-ல் விஜய்யுடன் நடிப்பது இவர்தான்!! 20 வருடங்களுக்கு பிறகு இணைந்த காம்போ!!
தளபதி விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் 67-வது படம் தான் லியோ. இப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரித்து வருகிறார். இதனையடுத்து வெளிவரவிருக்கும் விஜய்யின் 68-வது திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்புகள் எழுந்துள்ளது.இதை வெங்கட் பிரபு தயாரிக்க உள்ளார்.
தற்போது இந்த படத்தில் நடிக்கவிருக்கும் நடிகரின் பெயர் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. லியோ படப்பிடிப்பின் போதே வெங்கட் பிரபுவின் இந்த கதைக்கு விஜய் சரி என்று கூறி விட்டார்.
எனவே, இப்படம் குறித்து படக்குழுவினரோடு இயக்குனர் வெங்கட் பிரபு தீவிரமாக கலந்துரையாடி வருகிறார். இதற்கு முன்பு இவரின் இயக்கத்தில் வெளிவந்த கஸ்டடி என்னும் திரைப்படம் தோல்வியை தழுவியது.
எனவே, இதனையடுத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் வரவிருக்கும் படம் தான் தளபதி 68. வெங்கட் பிரபு இந்த திரைப்படம் குறித்து எந்த விவரங்களையும் வெளியிடாமல் ரசிகர்களை ஆர்வத்துடன் வைத்திருந்தார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு ஜூலை மாதம் துவங்க உள்ள நிலையில், இதில் நடிக்கும் நடிகர்களின் பெயரை ஜூலை மாதம் பதினைந்தாம் தேதிக்கு பிறகுதான் வெளிவிடுவோம் என்று படக்குழு கூறி வந்தது.
எனவே, வெங்கட் பிரபு நடிகர்களின் பெயரை அனைவருக்கும் கூறாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாக கூறி மென்மேலும், ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை அதிகரித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நடிக்க இருக்கும் ஒரு நடிகரின் பெயர் வெளியாகியுள்ளது. அந்த நடிகர் விஜய்-க்கு மிகவும் நெருக்கமானவர், இருவரும் இணைந்து படம் நடித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.
அவர் வேறு யாரும் இல்லை நடிகர் ஜெய் தான். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வெற்றி அடைந்த ஒரு படம் தான் பகவதி.
இந்த படத்திற்கு பிறகு தற்போது இத்தனை ஆண்டுகள் கழித்து இவர்கள் இணையவிருக்கிறார்கள். எனவே, இந்த காம்போ-வை திரும்ப திரையில் பார்க்க ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.