பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

0
30
Petition against pen memorial dismissed!! Supreme Court Order!!
Petition against pen memorial dismissed!! Supreme Court Order!!

பேனா நினைவுச்சின்னத்திற்கு எதிரான மனு தள்ளுபடி!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் முன்னாள் முதல் அமைச்சரான கருணாநிதிக்கு பேனா வடிவம் கொண்ட ஒரு நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நினைவுச்சின்னம் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அவர் அந்த மனுவில், நினவுச்சின்னம் கடலில் அமைக்கப்படுவதால் கடல் வளம் பாதிக்கும். மேலும், நாடு முழுவதும் எந்த கடலிலும் கட்டுமான பணிகள் அமைப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதில் தலைமை நீதிபதியான அமர்வு இது எந்த மாதிரியான வழக்கு என்பதை விசாரித்தார். மேலும், இதில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதற்கான எந்த விவரங்களும் தரப்படவில்லை.

எனவே, இந்த மனுவை பொதுநல மனுவாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி கூறினார். இதன் பிறகு இந்த மனுவை மேற்கொண்டு விசாரிக்க முடியாது என்று கூறி இந்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தார்.

இந்த மனு தள்ளுபடி ஆனதால் சென்னை மெரினா கடற்கரையில் கலைஞருக்கான பேனா நினைவுச்சின்னம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகள் எந்தவித தடையும் இன்றி நடைபெற உள்ளது.

இதற்கான ஒதுக்கீட்டை தமிழக அரசு முன்னரே செய்து விட்ட நிலையில், தற்போது இதற்கான வேலைகள் தீவிரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
CineDesk