லைக்காவிடம் ஜேசன் சஞ்சையை சேர்த்து விட்டது இவர்தான்!!! பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் பேட்டி!!!

0
132
#image_title

லைக்காவிடம் ஜேசன் சஞ்சையை சேர்த்து விட்டது இவர்தான்!!! பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் பேட்டி!!!

நடிகர் விஜய் அவர்களின் மகன் ஜேசன் சஞ்சய் அவர்களுக்கு லைகா நிறுவனத்திடம் படம் இயக்க வாய்ப்பு வாங்கிக் கொடுக்க சிபாரிசு செய்தவர் பற்றி பிரபல நடிகர் சித்ரா லட்சுமணன் அவர்கள் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக நடிகர் விஜய் இருக்கிறார். இவருடைய மகன் ஜேசன் சஞ்சய் அவர்கள் தமிழ் சினிமாவில் அடுத்ததாக இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். ஜேசன் சஞ்சய் அவர்கள் கனடாவில் பிலிம் மேக்கிங் படித்துள்ளார். மேலும் பல குறும்படங்களை இயக்கியுள்ளார்.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படத்தை லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூட சில வாரங்களுக்கு முன்னர் வெளியானது. இந்த திரைப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது.

மேலும் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் திரைப்படத்தில் நடிகர் கவின் நடிக்கவுள்ளதாகவும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் நடிகர் சித்ரா லட்சுமணன் அவர்கள் ஜேசன் சஞ்சய் அவர்களுக்கு சிபாரிசு செய்து இயக்குநர் வாய்ப்பு வாங்கி கொடுத்தவர் பற்றி கூறியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் சித்ரா லட்சுமணன் அவர்கள் “நடிகர் விஜய் அவர்கள் அவருடைய மகன் ஜேசன் சஞ்சயை நடிகராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். மேலும் திரைப்படங்களில் நடிக்க வைக்க நடிகர் விஜய் அவர்கள் ஜேசன் சஞ்சயிடம் பேசினார். ஆனால் ஜேசன் சஞ்சய்க்கு நடிப்பதை விட திரைப்படங்களை இயக்குவதில் அதிக ஆர்வம் இருந்தது. இதையடுத்து நடிகர் விஜய் அவர்கள் ஜேசன் சஞ்சய் அவர்களின் ஆசையை நிறைவேற்ற அனுமதி கொடுத்தார்.

ஆனால் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆகும் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதற்கு பின்னணியில் நடிகர் விஜய் இருக்கிறார் என்று கூறுவது பொய். உண்மையில் நடிகர் விஜய் அவர்களின் மனைவியும் ஜேசன் சஞ்சயின் தாயுமான சங்கீதா அவர்கள் லைகா நிறுவனத்திடம் பேசி ஜேசன் சஞ்சய்க்கு இயக்குநர் வாய்ப்பு பெற்றுக் கொடுத்துள்ளார். மகனை இயக்குநராக்கி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சங்கீதா தற்பொழுது ஜேசன் சஞ்சய் இயக்குநராக்கி உள்ளார்” என்று கூறினார்.

Previous articleஅரசு ஊழியர்களின் கவனத்திற்கு!!! தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
Next articleபல வருடங்களாக காத்திருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!! இதோ வந்துவிட்டது போட்டித்தேர்வு!!