தெண்டுல்கரின் சாதனையை இவரால் மட்டும்தான் முறியடிக்க முடியும்

Photo of author

By Parthipan K

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் தெண்டுல்கரின் சாதனையை மற்றவர்கள் எட்டுவது கடினமான காரியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் அடிக்க வேண்டும் என்று விராட்கோலி வெளிப்படையாக பேசாவிட்டாலும், அந்த சாதனை குறித்து அவர் மனதில் நினைத்து இருக்கலாம் என்று நான் நம்புகிறேன்.

தெண்டுல்கரை அடுத்து அந்த சாதனையை எட்டக்கூடியவர் யார்? என்று கேட்டால் விராட்கோலியாயாக தான் இருக்க முடியும். விராட்கோலி குறுகிய காலத்தில் நிறைய சாதனைகள் படைத்து இருக்கிறார். தெண்டுல்கரின் இந்த சாதனையை இந்திய வீரர் ஒருவரால் தான் முறியடிக்க முடியும் என்று நினைக்கிறேன். தெண்டுல்கரின் சாதனைய முறியடிக்கும் அளவுக்கு திறமையும், உடல் தகுதியும் விராட்கோலிக்கு நிறைவாக இருக்கிறது. விராட்கோலி ஓய்வு பெறும் முன்பு தெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.