ஸ்டாலின் அரசுக்கு சவால் விட்ட எடப்பாடியார்!!

Photo of author

By Parthipan K

 

ஸ்டாலின் அரசுக்கு சவால் விட்ட எடப்பாடியார்

 

 

 

 

 

 

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்து பேசினார். அப்போது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கடுமையாக சாடினார். தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் பிரச்சனைகள் குறித்தும் மேட்டூர் அணை விவகாரம் குறித்து விரிவாக பேசினார் நீட் தேர்வில் திமுக அரசின் அரசியல் குறித்தும் விமர்சித்தார் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்.

 

 

அவர் பேசியதாவது, மேட்டூர் அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தமிழகத்திற்கு தேவையான நீரை நீதிமன்றம் உத்தரவின்படி திறந்து விட மறுக்கிறது. இன்றைய முதலமைச்சர் இது குறித்து நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று திமுக அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தார்.

 

 

இதைதொடர்ந்து நீட் தேர்வு குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள்,

 

நீட் தேர்வு ரத்து செய்வதை வலியுறுத்தி ஒரு நாளாவது ஸ்டாலின் அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களால் நாடாளுமன்றத்தை முடக்க முடிந்ததா? என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

 

 

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களின் சாதிய தாக்குதல் குறித்து பேசிய அவர், பள்ளி மாணவர்களிடையே சாதிய ரீதியான மோதல் தவறானது என்றும் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னத்துரையையும், அவரது தங்கையையும் அறிவாளால் தாக்குதல் நடத்திய மாணவர்கள் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இதுபோன்ற சம்பவங்கள் இனியும் நடக்காமல் தமிழகத்தில் தடுத்திட வேண்டும் என்றும் எடப்பாடியார் கோரிக்கை விடுத்தார்