தலைமை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் டெட் தேர்வு மூலமா அல்லது பணி மூப்பு மூலமா!! விளக்குகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்!!

0
94
Head teacher post by teacher dead test or by seniority!! Minister Anbil Mahesh explains!!
Head teacher post by teacher dead test or by seniority!! Minister Anbil Mahesh explains!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த சூர்யா பொறியியல் கல்லூரியில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இலவச கல்வி மற்றும் ஆசிரியர் பாதுகாப்பு என்ற தலைப்பில் மாநாடு சங்கத்தின் மாநில தலைவர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்றது.இதில் பள்ளிக்கல்வி அமைச்சரான அன்பில் மகேஷ் அவர்கள் மற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி அவர்களும் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அன்பில் மகேஷ் அவர்கள் கடந்த 10 ஆண்டுகளில் சீர்குலைக்கப்பட்ட பள்ளிக்கல்வித்துறை தவறுகளை சரி செய்வதற்கே திமுகவிற்கு கடந்த 3 ஆண்டுகள் சரியாக போய்விட்டன என்று தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக இந்த 3 ஆண்டுகளில் 60 க்கும் மேற்பட்ட நலத்திட்டங்களை இந்த அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

அடுத்த இரண்டு ஆண்டு மட்டும் திமுக ஆட்சி இல்லை, ஏழாவது முறையாக, அடுத்த ஏழு ஆண்டுகளுக்கும் திமுக தான் ஆட்சியில் இருக்கும். ஒரே கையெழுத்தில் ஒரு லட்சம் வரை பணியில் இருந்து நீக்கி அவர்கள் யார் என்பதையும், ஒரே கையெழுத்தில் அரை லட்சம் பேரை பணியில் சேர்த்தவர்கள் யார் என்பதையும் நீங்கள் மறந்து விடக்கூடாது. ஆசிரியர்களோடு சேர்ந்து இந்த சமூகத்தை உயர்த்த நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம் என்றும் அவர் தன்னுடைய உரையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

மாநாடு முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ் அவர்கள் :-

தமிழக முதல்வரின் தலைமையில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் குறிப்பாக முதலமைச்சரிடம் நாங்கள் அளித்த விளக்கம் 2500 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவித்துள்ளோம்.

இது சம்பந்தப்பட்ட வழக்கு இன்றளவும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.தலைமையாசிரியர் தேர்வில் டெட் தேர்வில் முறையில் தேர்வு செய்யப்படுமா அல்லது பணி மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுமா என்கிற கேள்விக்கு, அரசாங்கத்தை பொருத்தவரை பணி மூப்பு அடிப்படையை எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இது தொடர்பான பட்டியல் நவம்பர் 13ஆம் தேதிக்கு பிறகு பட்டியல் வரவுள்ளது. அது தொடர்பான பட்டியல் வெளியாகும் போது பள்ளிக்கல்வி தொடர்பான 30 சதவீத வழக்குகள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் அவர் பேசுகையில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இதனால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர்களது சம்பளத்தில் 2500 ரூபாய் வரை உயர்த்தி வழங்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Previous articleமுதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு TMB வங்கி வேலைவாய்ப்பு!! மொத்தம் 170 காலிப்பணியிடங்கள்!!
Next articleபடத்திற்காக கேட்டுப் போன உணவை சாப்பிட்ட சரத்குமார்!! நெகிழ்ச்சியுடன் தெரிவித்த இயக்குனர்!!