படத்திற்காக கேட்டுப் போன உணவை சாப்பிட்ட சரத்குமார்!! நெகிழ்ச்சியுடன் தெரிவித்த இயக்குனர்!!

0
127
Sarathkumar ate the food requested for the film!! The director said with excitement!!
Sarathkumar ate the food requested for the film!! The director said with excitement!!

நடிகர் சரத்குமார் அவர்கள் சினிமா துறையில் தன்னுடைய தொடக்க காலத்தில் பெரிதளவு வெற்றியை சந்திக்காத ஒருவராவார். இவருக்கு மேக்கப் மேன் மூலமாக விஜயகாந்தினுடைய அறிமுகம் கிடைக்கவே அதன் மூலம் இவருக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளன.

ஹாலிவுட்டில் பிரபலமான நடிகர் சரத்குமார் அவர்கள் பெரும்பாலும் வில்லனாகவே நடித்து வந்துள்ளார். அப்பொழுது தமிழ் சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவே, இவர் நடித்த படம் தான் சூரியன். இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா துறையில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.

மேலும் இவர் பல வெற்றி படங்களை கொடுத்ததால் வெற்றி நாயகர்களின் வரிசையில் இவரும் ஒருவராக சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இருக்கும் பொழுது தான் இவருக்கு சூரிய வம்சம் திரைப்படத்தின் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை இயக்குனர் விக்ரமன் இயக்கியுள்ளார்.

இப்படம் குறித்து விக்ரமன் அவர்கள் தெரிவித்த சுவாரசியமான கருத்துக்களை இப்பதிவில் பார்க்கலாம் :-

சரத்குமார் வெற்றி நாயகனாக அமர்ந்த நேரத்தில் அவருக்கு சூரியவம்சம் படத்தில் நடிக்க வாய்ப்பு அமைந்தது. 1997 ஆம் ஆண்டு பூவே உனக்காக படத்தின் வெற்றிக்கு பின்னர் மீண்டும் விக்ரமனை சூப்பர் குட் பிலிம்ஸ் படம் இயக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

முதலில் அந்த நிறுவனத்திடம் விக்ரமன் வானத்தைப்போல கதையை தான் கூறினாராம். ஆனால் சரத்குமாரை வைத்து தான் அந்த படத்தை இயக்க வேண்டும் என்பதால் அந்த கதையை மாற்றி தான் சூர்யவம்சம் படத்தின் கதையை கூறியிருந்ததாக இயக்குனர் விக்ரம் அவர்கள் தெரிவித்து இருக்கிறார்.

விக்ரமன் இயக்க அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் சரத்குமார் நடித்து வந்திருக்கிறார். மணிவண்ணன், தேவயானி, பிரியா ராமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு காட்சியில் மகன் சரக்குமார் தனியாக அமர்ந்து சாப்பிடுவார். அவருக்கு தேவயானி உணவு பரிமாறுவது போன்று காட்சி ஒன்று வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இதனை காட்சிப்படுத்தும் பொழுது நடிகர் சரத்குமார் அவர்கள் உணவை சாப்பிட்டு திரும்பி துப்பிக் கொண்டே இருந்துள்ளார். ஒவ்வொரு முறை காட்சிப்படுத்தும் பொழுதும் இவ்வாறே தொடர்ந்து செய்துள்ளார். அதற்கு இயக்குனர் விக்ரமன் அவர்கள் உங்களுக்கு அரிசி சாதம் பிடிக்கவில்லையா என்று கேட்டதற்கு, மன தைக்கத்துடன் சரத்குமார் அவர்கள் இந்த உணவு மிகவும் மோசமான அளவில் கெட்டுப் போய் உள்ளது.

அதனால்தான் இதை நான் தொப்பி விடுகிறேன் என்று கூறியதோடு மட்டுமின்றி, ஏன் சாப்பாடு கெட்டு உள்ளது என்று யூனிட் ஆட்களிடம் கேட்டேன் அதற்கு அவர்கள் இயக்குனரிடம் இதைக் கூற வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். அதனால்தான் இதைப் பொறுத்துக் கொண்டு நானே காட்சியில் நடித்துக் கொண்டிருக்கிறேன் என அவர் தெரிவித்து இருந்ததாக இயக்குனர் விக்ரம் அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

Previous articleதலைமை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் டெட் தேர்வு மூலமா அல்லது பணி மூப்பு மூலமா!! விளக்குகிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்!!
Next articleஏர் இந்தியாவின் முக்கிய அறிவிப்பு!! புதிதாக மேற்கொள்ளப்படும் உணவு கட்டுப்பாடு!!