கொரோனாவில் இருந்து குணமானவர்கள் இந்த தீவிற்கு செல்லலாம்

0
65
உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில்  அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது.  பிரேசிலில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38 லட்சத்தை தாண்டியுள்ளது.  கொரோனா தொற்று காரணமாக பிரேசில் நாட்டு எல்லைகள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன.  தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு தீவு ஒன்றையும் பிரேசில் அடுத்த வாரம் திறக்க உள்ளது.
பெர்னண்டோ டி நோரோன்ஹா என்ற தீவு மிக அழகிய இடங்களை கொண்டுள்ளது. 21-க்கும் மேற்பட்ட எரிமலைகளும் அந்த தீவில் உள்ளன. 5 மாதங்களுக்குப் பிறகு  இந்த தீவை திறப்பதாக பிரேசில் அரசு அறிவித்தது. ஆனால்,  ஆனால் விநோதமான ஒரு அறிவிப்பும் வெளியாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர்களுக்கு மட்டுமே இந்த தீவில் நுழைய அனுமதி உண்டு.
author avatar
Parthipan K