காபி என்பது பலரது வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று. பலரது காலை விடிவதே காபி உடன் தான். சிலருக்கு காபி குடித்தால் தான் அன்றாட வேலையே ஓடும் என்ற அளவிற்கு காபி அவர்களது வாழ்க்கையில் முக்கிய அங்கமாக மாறி இருக்கும்.
பலருக்கு நாளுக்கு இரு வேளை, நான்கு வேளை தொடங்கி, நாளொன்றுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு காபி என காபி பிரியர்கள் பல வகையாக இருக்கிறார்கள்.
காபியில் இன்ஸ்டன்ட் காபி, பில்டர் காபி, வடிகட்டிய காபி, வடிகட்டாத காபி, கோல்ட் காபி, கருப்பு காபி, இஞ்சி காபி என பல வகைகள் உள்ளன.
வெறும் காபி மட்டும் குடிக்காமல் அதனுடன் முறுக்கு, மிக்ஸர், பஜ்ஜி, போண்டா என சேர்த்து சாப்பிடுபவர்களும் உண்டு. நல்ல பசி எடுக்கும் வேளையில் 1 கப் காபி மற்றும் 2 பிஸ்கட்டுகளை அதனுடன் தொட்டு சாப்பிட்டால் ஒரு வேலை சாப்பாடு சாப்பிட்டதற்கான முழு திருப்தி கிடைக்கும்.
காபியின் அரோமா ஒரு வகையான மன புத்துணர்வை கொடுக்கும்.
ஆனால் காபி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும், உடல் எடையை கூட்டும் எனவும், காபி உடலுக்கு கேடு எனவும் காலம் காலமாக கூறி வருகின்றார்கள்.
காபி அருந்துவதினால் சில நன்மைகளும் உண்டு:
உடல் புத்துணர்ச்சி: சோர்வாக உணருவோர், வேலை பளு, மந்தமாக உணருபவர்கள் 1 கப் காபி குடித்தால் போதும், தற்காலிக புத்துணர்ச்சி கிடைத்து சுறுசுறுப்பாக வேலையை மீண்டும் தொடங்கிடுவார்.
மன அழுத்தம்: காபி குடிப்பதனால் ஏற்படும் திடீர் புத்துணர்ச்சி அவ்வளவு நேரம் நம் மனதை அழுத்திக் கொண்டிருந்த ஸ்ட்ரெஸ்சை அடியோடு மறக்க வைத்து விடும்.
வாதம்: காபி இதய வாதம், மற்றும் இதய தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும்.
புற்றுநோய் : காபி அருந்துவதினால் புற்றுநோய்க்கான இடர்பாடுகளை தடுக்கும் எனவும் கூறுகிறார்கள்.
காபி உடல் நலத்திற்கு மட்டுமல்லாமல் காபி தூள் முக அழகிற்கும் பயன்படுத்தப்படுகிறது.