உடல்நிலை பாதிப்பு! ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு! 

0
269
#image_title

உடல்நிலை பாதிப்பு! ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு! 

உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் ஆட்டோ டிரைவர் ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். மனதை உருக்கும் இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்று உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு ரோட்டில் உள்ள பாலதிருப்பதிநகரை சேர்ந்தவர் ராஜசேகர் வயது 23. இவர் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் இவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல் நலம்  கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் இவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

உடல் நல பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் நோய் பாதிப்பு குணமாகவில்லை. இதனால் இவர் சோகத்தில் இருந்து வந்துள்ளார். நேற்று  அவரது வீட்டில் யாரும் இல்லை என கூறப்படுகிறது. நோய் பாதிப்பினால் மனம் உடைந்த அவர் யாரும் இல்லாத சூழ்நிலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் அவரது வீட்டில் உள்ளவர்கள் வீடு திரும்பியதும் ராஜசேகர் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் தரவே அவர்கள் வந்து ராஜசேகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த இறப்பு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 

Previous articleகுடும்பத் தலைவிகளுக்கு ஹேப்பி நியூஸ்! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! 
Next articleதுருக்கியில் தொடர்கதையான நிலநடுக்கம்! மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான மக்கள்!