துருக்கியில் தொடர்கதையான நிலநடுக்கம்! மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான மக்கள்! 

0
221
#image_title

துருக்கியில் தொடர்கதையான நிலநடுக்கம்! மீண்டும் அதிர்ச்சிக்குள்ளான மக்கள்! 

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது.

துருக்கியில் கடந்த ஆறாம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்தனர். ஏராளமானோர் தங்கள் வீடு வாசல்களை இழந்து நடுத்தெருவிற்கு வந்தனர். அதிகாலையில் ஏற்பட்டதால் இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு கடுமையானதாக காணப்பட்டது.

மீட்பு பணிகள் முடிவடைந்த பின்னால் தற்போது அங்கு புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனாலும் அங்கு தொடர்ந்து நில அதிர்வுகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. இந்த வருடத்தில் ஏற்பட்ட பேரழிவாக கருதப்பட்ட இந்த நிலநடுக்கத்தால் துருக்கி முற்றிலும் நிலை குலைந்தது. இதன் தாக்கத்திலிருந்து இன்னும் மக்கள் வெளிவரவில்லை. அதற்குள் மற்றும் ஓர் நிலநடுக்கம் வந்து மக்களை அதிர்ச்சியடைய  செய்துள்ளது.

இந்த நிலையில் துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகியுள்ளது. துருக்கியில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அங்கு கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் அந்த நாட்டு மக்கள் தங்கள் வீடுகளுக்குள் செல்ல பயந்து பொதுவெளியில் தங்கி வருகின்றனர்.