தினமும் உறவு வைத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லதா? கெடுதலா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

Photo of author

By CineDesk

தினமும் உறவு வைத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லதா? கெடுதலா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்

கணவன் மனைவி தினமும் உடல் உறவு வைத்துக்கொள்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல என பலரும் கூறி வருவதை கேள்விபட்டிருக்கலாம்.உண்மையிலேயே தினமும் உறவு வைத்து கொள்வது உடலுக்கு கெடுதலை தருமா என்றால் அது இல்லையென்றே சிலர் கூறுகின்றனர்.

ஆனால் அதேவேளையில் இருவரும் தினமும் உடல் உறவுக்கொள்வதற்கு ஏற்ற வகையில் உடல் நலமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமாக கருதபடுகிறது.கணவன் மனைவி இருவரும் தினமும் உறவு வைத்து கொள்வது உடலுக்கு நல்லதே என்று கூறுபவர்கள் அதற்காக பின்வரும் காரணங்களை கூறுகின்றனர்.

உடல் உறவுக்கு உந்துதலாக இருக்கும் பாலுணர்ச்சியைத் தூண்டுவது நமது உடலில் இருக்கும் நாளமில்லாச் சுரப்பியே.

அதாவது ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரன் எனும் ஆண்ட்ரஜன் வகையான நாளமில்லாச் சுரப்பியும், பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் என்னும் நாளமில்லாச் சுரப்பியும் பாலுணர்வை தூண்டுவதில் முக்கிய அங்கம் வகிக்கிறது.இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட பருவ வயத்திற்குப் பின், இருபாலருக்கும் அதன் சுரப்புத் தன்மை குறையத் தொடங்கும்.

இதனால்தான் திருமணமாகி பல ஆண்டுகள் ஆன தம்பதிகளிடம் உடல் உறவும் கொள்ளும் ஆர்வமும் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.உடல் உறவில் நாட்டம் குறைவதற்கு அவர்களுக்கு குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு அதிகமாவதும் ஒரு காரணமாக கருதபடுகிறது

குறிப்பாக திருமணமான ஆரம்பத்தில் தம்பதிகள் ஒரு நாளைக்கு பலமுறையும், அதன் பிறகு ஒரு நாளில் சிலமுறையும் பின்னர் தினமும் ஒரு முறை, பிறகு வாரத்திற்கு ஒரு முறை, பின் எப்போதாவது ஒரு முறை என கொஞ்சம் கொஞ்சமாக உடல் உறவுக் கொள்வது குறைந்து போவதற்கு, நமது உடலில் உள்ள நாளமில்லாச் சுரப்பியின் சுரப்புத் தன்மை குறைந்து கொண்டே போவது தான் காரணம்.

இந்த காரணங்கள் அனைத்தும் அனைவருக்கும் பொதுவான ஒன்று தான் என்றாலும் அனைவருக்கும் இது பொருந்தாது.குறிப்பாக சிலருக்கு, இயற்கையாகவே வயதான காலத்தில் கூட உடல் ஆரோக்கியம் மிகவும் நன்றாக இருக்கும். உதாரணமாக நமது முன்னோர்கள் கடைசி வரை உடல் உறவு வைத்திருந்தார்கள் என்பதற்கு அவர்களின் உடல் உழைப்பும் அவர்களின் பாரம்பரிய உணவு முறையுமே காரணமாகும்.ஆனால் தற்போதைய நவீன உணவு பழக்க வழக்கங்களால் பல இளைஞர்களுக்கு குழந்தை பிறப்பதே தாமதமாகி வருவது வழக்கமாகிவிட்டது.

வயதாகும் போது உடல் உறவுக் கொள்ளும் ஆர்வம் குறைந்தால் அதற்குப் பதிலாக தம்பதிகள் தொடுதல் உறவை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தபடுகிறது.குறிப்பாக இந்த தொடுதல் உறவு தம்பதிகளிடையே அன்பையும் இருவருக்குமிடையில் நேசத்தையும் அதிகபடுத்தும் என்று கருதப்படுகிறது.

திருமணமான தம்பதிகள் தினமும் உடலுறவு கொண்டால் உடல் எதிர்ப்பு சக்தி கூடும். இரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்டவை குறையும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இருவருக்குள்ளும் செக்ஸ் உணர்வு புதுபிக்க படும், நன்றாக தூக்கம் வரும் என்றும் கூறுகின்றனர். மேலும் இது ஒரு உடற்பயிற்சி மாதிரி இருதய பிரச்சனைகள் குறையும். பெண்களுக்கு மாதவிடாய் வரும் போது வரும் வயிறு வலியின் அளவு குறையும் என்றும் கூறுகின்றனர்.

குறிப்பாக ஆண்கள்  ஒரு மாதத்தில் குறைந்தது 20 தடைவையாவது உடலுறவு கொண்டால் பிராஸ்டேட் கேன்ஸர் வராமல் தடுக்கபடும் என்றும் கூறுகின்றனர்.