குழந்தைகளுக்கு நாள்பட்ட சளி மலம் வழியாக வெளியேற இதை ஒரு முறை கொடுத்தாலே போதும்:!

Photo of author

By Pavithra

குழந்தைகளுக்கு நாள்பட்ட சளி மலம் வழியாக வெளியேற இதை ஒரு முறை கொடுத்தாலே போதும்:!

குழந்தைகளை வைத்திருக்கும் அனைத்து தாய்மார்களும் வேதனை படக்கூடிய ஒரே விஷயம் என்னவென்றால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடித்து விடுகிறது என்ற கவலையே.மேலும் அடிக்கடி இருமல் மற்றும் சளி டானிக்கையை கொடுத்தால் குழந்தைகளுக்கு ஏதாவது பக்க விளைவுகள் ஏற்படுமா என்ற பயமும் தாய்மார்களிடையே அதிகமாக இருக்கும்.

இனி கவலையே வேண்டாம்.நெஞ்சு சளியாக இல்லாமல் வெறும் சாதாரண சளியாக இருக்கும் குழந்தைகளுக்கு டானிக்கே தேவையில்லை.இதைக் கொடுத்தாலே போதும் சளி மலம் வழியாக வந்துவிடும்.

டிப்ஸ்1: ஒரு வெற்றிலை மற்றும் ஐந்து துளசி இலையை நன்றாக கழுவி எடுத்துக்கொண்டு அதன் சாரை பிழிந்து 6 மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 10 சொட்டுக்களும் ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கால் சங்கு அளவும் இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு அரை சங்கு அளவும் கொடுத்து வந்தால் ஒரே நாளில் சளி மலம் வழியாக வெளியேறிவிடும்.இதனை எடுத்துக் கொள்ளும் பொழுது டானிக்கைகள் எடுத்துக் கொள்ளக்கூடாது.

டிப்ஸ் 2: இரண்டு அல்லது மூன்று கற்பூரவள்ளி இலையை எடுத்து நன்றாக கழுவி அதை ஆவில் அவித்து அந்த சாரினை பிழிந்து ஒரு மாதத்திற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு ஐந்திலிருந்து ஏழு சொட்டு வீதம் கொடுக்கலாம்.சளி உடனடியாக கரைந்து மலம்வழியே வெளியேறும்.இதனை ஒரு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.அரை சங்கு அளவு கொடுத்தால் நல்ல பலன் தரும்.கற்பூரவள்ளி தலையை ஆவில் வைப்பதற்கு காரணம் அதன் காரத்தன்மையை குறைக்கவே.