சிறுநீரக கற்கள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா? இதைக் குடித்தால் கற்கள் கரைந்து சிறுநீர் வழியே வந்துவிடும்!

0
160

சிறுநீரக கற்கள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா? இதைக் குடித்தால் கற்கள் கரைந்து சிறுநீர் வழியே வந்துவிடும்!

உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஓர் உறுப்பு என்னவென்றால் அது சிறுநீரகமாகும்.
ரத்தத்திலிருந்து தேவையற்ற பொருட்களை வெளியேற்றி சிறுநீராக மாற்றி அதை வெளியேற்றுவது தான் சிறுநீரகத்தின் வேலை. சராசரியாக ஒரு நாளைக்கு ஒருமனிதனின் சிறுநீரகங்கள் ஒன்றறை லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. புரத வளர்ச்சிதை மாற்றத்திற்கு பிறகு எஞ்சி இருக்கின்ற யூரிக் அமிலம்,அக்ஸலேடர்,பாஸ்பேட் போன்ற கழிவு பொருட்களை வெளியேற்றுவது சிறுநீரகத்தின் முக்கிய வேலைகளில் ஒன்றாகும்.
ஒருவேளை இவற்றை சரிவர வெளியேற்றப்படவில்லை என்றாலோ அல்லது தேவைக்கு அதிகமான கழிவுகள் உடலில் தங்கினாலோ சிறுநீரக கற்கள் வர அதிகம் வாய்ப்பு இருக்கிறது. சிறுநீரகத்தில் காரத்தன்மை அதிகரித்தால், பாஸ்பேட் அல்லது சுண்ணாம்புக் கற்கள் உருவாகும்.சிறுநீரகத்தில் அமிலத்தன்மை அதிகரித்தால் யூரிக் கற்கள் உருவாகும்.

இவ்வாறு உருவாகும் கற்களை ஒரே வாரத்தில் கரைத்து உங்கள் சிறுநீரகத்தின் செயலை அதிகரிக்க இதை ஒரு வாரம் குடித்தால் போதும்!

தேவையான பொருட்கள்:

இளநீர்: 1

சீரகம்: ஒரு டீஸ்பூன்

நாட்டு சக்கரை: ஒரு டீஸ்பூன்

பாசிப்பருப்பு:ஒரு டீஸ்பூன்

ஒரு இளநீரை வெட்டி அதில் சீரகம் ஒரு ஸ்பூன்,நாட்டு சக்கரை ஒரு ஸ்பூன், பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன், போட்டு மாலையில் மூடி வைக்க வேண்டும்.காலையில் இந்த நீரை வடிகட்டி வெறும் வயிற்றில் ஒரு வாரம் குடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட சிறுநீரக கற்களும் கரைந்து சிறுநீர் வழியே வெளியேறிவிடும்.

author avatar
Pavithra