இந்த நேரத்தில் ஒருபொழுதும் விளக்கு ஏற்ற கூடாது! மறந்து கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!

0
134

இந்த நேரத்தில் ஒருபொழுதும் விளக்கு ஏற்ற கூடாது! மறந்து கூட இந்த தவறை செய்து விடாதீர்கள்!

நாம் நம் வீட்டில் விளக்கேற்றுவதற்கென சில நாட்கள் உள்ளது அதனைத் தவிர மற்ற நாட்களில் விளக்கேற்றும் பொழுது நமக்கு எண்ணற்ற தோஷங்கள் ஏற்படுகின்றது அவ்வாறு எந்த தினங்களில் விலக்கி ஏற்றக்கூடாது என்பதனைப் பற்றி இந்த பதிவின் மூலம் காணலாம். உடன் பிறந்தவர்கள் மற்றும் பங்காளிகள் வீட்டில் இறப்பு ஏற்பட்டால் காரியம் முடியும் தேதி வரை வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது.

அடுத்ததாக நம் வீட்டில் குழந்தை பிறந்திருந்தாலும் இல்லை பங்காளிகள் வீட்டில் குழந்தைகள் பிறப்பது என்பது  சுகமான தீட்டாகும் அப்போது வீட்டில் தீபம் ஏற்ற கூடாது. மேலும் வீட்டில் புண்ணியாதானம் செய்யும் வரை தீபம் ஏற்றக்கூடாது. அதன் பிறகு நாம் வசிக்கும் பகுதியில் யாரேனும் இறந்துவிட்டால் அன்றைய தினம் நம் வீட்டில் விளக்கு ஏற்ற கூடாது.

மேலும் வீட்டில் அசைவம் சமைக்கும் பொழுது அல்லது நாம் அசைவம் சாப்பிட்ட பிறகோ விளக்கு ஏற்ற கூடாது. அசைவம் சமைத்தால் வீட்டை நன்கு துடைத்துவிட்டு அதன் பிறகு விளக்கில் மஞ்சள் குங்குமம் வைத்து விளக்கேற்ற வேண்டும்.

author avatar
Parthipan K