ஆரோக்கியம் நிறைந்த அடை தோசை: ஆஹா அற்புத சுவையில் காலை உணவு!

0
165

ஆரோக்கியம் நிறைந்த அடை தோசை: ஆஹா அற்புத சுவையில் காலை உணவு! 

அடை தோசை மிகவும் ஆரோக்கியமான ஒரு காலை உணவு. இந்த தோசையை பல்வேறு பருப்பு வகைகள் சேர்த்து செய்வதால் இதனை காலை வேளையில் சாப்பிட்டால் உடலுக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் இருக்கலாம். மேலும் இந்த ரெசிபியை எந்தவொரு சைடிஷ் இல்லாமல் அப்படியே சாப்பிடலாம் அல்லது தேங்காய் சட்னியுடனும் சாப்பிடலாம். இப்போது அந்த ஆரோக்கியமான அடை தோசை எப்படி செய்வது என்று பார்ப்போமா!

 

தேவையான பொருட்கள்:- அரைப்பதற்கு:

புழுங்கல் அரிசி ஒரு கப் பச்சரிசி-1/2 கப், உளுத்தம் பருப்பு 1/2 கப், துவரம் பருப்பு 1/2 கப், பாசிப்பயிறு 1/2 கப், கொள்ளு 1/2 கப், கடலைப்பருப்பு 1/2 கப், வரமிளகாய் -8, சோம்பு- 1 டீஸ்பூன், சீரகம் – 1 டீஸ்பூன், பூண்டு- 10 பல், இஞ்சி-1 துண்டு, உப்பு தேவையான அளவு

தாளிப்பதற்கு

வெங்காயம்- 2, கொத்தமல்லி- 1/2 கப், கருவேப்பிலை- சிறிது, கடுகு -1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு-2 டீஸ்பூன், கசகசா- 1/2 டீஸ்பூன், தேங்காய்-1/2 மூடி, எண்ணெய்- 3 டீஸ்பூன் செய்முறை:

முதலில் கொடுக்கப்பட்டுள்ள அரிசி மற்றும் பருப்புகளை ஊறவைத்து நன்கு கழுவி கிரைண்டரில் போட்டு அரைக்க வேண்டும். அப்படி அரைக்கும் போது அத்துடன் அரைப்பதற்கு கொடுத்துள்ள மற்ற பொருட்களையும் சேர்த்து மிகவும் மென்மையாக அறைக்காமல் ஓரளவிற்கு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தாளிப்பதற்கு, தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அதில் கொத்தமல்லி, கசகசா சேர்த்து கிளறி துருவி வைத்துள்ள தேங்காவை போட்டு சிறிது உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் பிரட்டி இறக்கி அதனை அரைத்து வைத்துள்ள மாவில் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இறுதியில் தோசை கல்லை அடுப்பில் வைத்து தோசைகளாக ஊற்றி எடுத்தால் அடை தோசை தயார். சூடான மற்றும் சுவையான அடை தோசை சாப்பிடலாம் வாங்க.

Previous articleட்விட்டரில் வலம் வரும் ஆபாச வீடியோக்கள்:! ட்விட்டரின் மீது பாயும் வழக்கு!!
Next article500 ரூபாய் நோட்டை வாங்கும் பொழுது கவனமாக இருங்கள்:!! காவல்துறையினர் எச்சரிக்கை!