ஆரோக்கியம் நிறைந்த பூண்டு சட்னி -மிகவும் ருசியாக செய்வது எப்படி?

0
38
#image_title

ஆரோக்கியம் நிறைந்த பூண்டு சட்னி -மிகவும் ருசியாக செய்வது எப்படி?

உணவில் பூண்டின் பயன்பாடு இன்றியமையாதது.இது உணவின் சுவையை கூட்டுவதற்கு மட்டுமல்ல நம் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கும் தான்.இந்த பூண்டில் வைட்டமின் பி6,கால்சியம்,காப்பர்,மெக்னிசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி அலிசின்,அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட்,சிஸ்டீன் சல்ஃபாக்சைடு உள்ளிட்டவையும் நிறைந்துள்ளது.

இவ்வளவு நன்மைகளை கொண்டிருக்கும் பூண்டில் சுவையான சட்னி செய்யும் முறை தெளிவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 20 பற்கள்

*காஷ்மீரி மிளகாய் – 10

*புளி – ஒரு எலுமிச்சம் பழ அளவு

*வெல்லம் – 1/2 தேக்கரண்டி

*நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி

*உப்பு – தேவையான அளவு

*கடுகு – 1 தேக்கரண்டி

*கறிவேப்பிலை – 1 கொத்து

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 கிளாஸ் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.இதில் 10 காஷ்மீரி மிளகாய் சேர்த்து நன்கு ஊற விடவும்.10 நிமிடம் கழித்து ஊற வைத்துள்ள மிளகாயை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து கொள்ளவும்.

அடுத்து அதில் 20 பல் பூண்டு,சிறிதளவு பூண்டு மற்றும் மிளகாய் ஊற வைத்து தண்ணீர் சிறிதளவு சேர்த்து மைய்ய அரைத்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.பின்னர் எண்ணெய் சூடேறியதும் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து வதக்கவும்.பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் மூடி போட்டு கொதிக்க விடவும்.

சட்னி நன்கு கொதித்து வரும் பொழுது தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.பின்னர் சிறு துண்டு வெல்லம்,1/2 தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கி இறக்கவும்.

அடுத்து அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி அவை சூடேறியதும் கடுகு மற்றும் ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து பொரிய விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து தாளித்த பொருளை தயார் செய்து வைத்துள்ள பூண்டு சட்னியில் சேர்த்து கிளறவும்.