குழந்தைகளை டார்கெட் செய்யும் ஹார்ட் அட்டாக்!! இது தான் முக்கிய காரணம்!!

தற்பொழுது நம் நாட்டில் இளைஞர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது.கொரோனாவிற்கு பின்னர் மாரடைப்பால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.முதியவர்களுக்கு மட்டும் வரும் நோயாக இருந்த மாரடைப்பு தற்பொழுது இளம் வயதினரை ஆட்டிப் படைத்து வருகிறது.

வட இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் 14 வயது சிறுவன் மற்றும் 8 வயது சிறுமி மாரடைப்பால் பலியாகி உள்ள செய்து நாட்டையே அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வரும் நிலையில் தற்பொழுது சிறு குழந்தைகளுக்கு சர்வ சாதாரணமாக மாரடைப்பு உண்டாகிறது.

இளம் வயது மாரடைப்பிற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை தான் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இக்காலத்தில் உள்ள குழந்தைகள் எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளையே அதிகம் உண்கின்றனர்.இதனால் குழந்தைகளின் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

இளம் வயது மாரடைப்பு அறிகுறிகள்:

1)படபடப்பு
2)மார்பு பகுதியில் வலி
3)சுய நினைவை இழத்தல்
4)உடல் சோர்வு

குழந்தைகள் ஓடி ஆடி விளையாடாமல் ஓர் இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் மொபைல் போன் பயன்படுத்துகின்றனர்.இதனால் உடல் பருமன்,உயர் இரத்த அழுத்தம்,இதய நோய் போன்றவை அதிகளவு உண்டாகிறது.

குழந்தைகளிடையே அதிகரித்து வரும் மன அழுத்தத்தால் மாரடைப்பு உண்டாகிறது.ஊட்டச்சத்து இல்லாத உணவுகளை குழந்தைகள் உட்கொள்வதால் அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி குறைந்து இதுபோன்ற ஆபத்தான நோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது.

எனவே குழந்தைகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்தினால் இதுபோன்ற ஆபத்தான நோய் பாதிப்புகள் உண்டாவது முழுமையாக தடுக்கப்படும்.