நெஞ்சை உலுக்கிய கோர விபத்து!! இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!!

Photo of author

By CineDesk

நெஞ்சை உலுக்கிய கோர விபத்து!! இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!!

கிருஷ்ணா என்பவர் கரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி லே-அவுட் பகுதியில் வசித்து வருகிறார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் தேநீர் கடை நடத்தி தொழில் செய்து வருகிறார். இவருக்கு ராம்குமார் என்று ஒரு மகன் உள்ளார்.

எனவே, ஞாயிற்றுக்கிழமை அன்று ராம்குமார் தனது தாய் மற்றும் அக்கா மகன் தருண் ஆகியோருடன் ஒரு மருத்துவமனைக்கு செல்வதற்காக கோவை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது கார் கரூர் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்தது. எதிரில் வந்த தனியார் பேருந்து ஒன்று இவர்களின் கார் மீது மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.

இந்த கோர விபத்தில் கார் முற்றிலுமாக நொறுங்கிய நிலையில், உள்ளிருந்த ராம்குமார் மற்றும் அவரின் அக்கா மகன் தருண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், ராம்குமாரின் தாய் உயிருக்கு போராடும் நிலையில், மீட்டெடுக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், எதிரில் வந்த தனியார் பேருந்து ஓட்டுனரும் உடம்பில் பல்வேறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் இறந்த ராம்குமார் மற்றும் தருண் ஆகிய இருவரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இந்த விபத்து குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தானது தற்போது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.மேலும், விபத்து ஏற்பட்ட குடும்பத்திற்கு பலரும் இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.