கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

0
174
Heavy rain echoes the order issued by the District Collector! Holidays only for schools in these districts!
Heavy rain echoes the order issued by the District Collector! Holidays only for schools in these districts!

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

தென்கிழக்கு வங்கக்கடலில் கடந்த வாரம் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது.அதனை தொடர்ந்து அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது.அதன் பிறகு  கடந்த 9 ஆம் தேதி நள்ளிரவு சுமார் மூன்று மணியளவில் புயலாக வலுப்பெற்றது.இந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர் வைக்கப்பட்டது.

இந்த புயல் ஆந்திர ஸ்ரீஹரிகோட்டா இடையே நள்ளிரவு கரையை கடந்தது.இந்நிலையில் வட தமிழகத்தில் மேல்நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் ,புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த மூன்று நாட்களுக்கு  கனமழை நீட்டிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.கனமழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,காஞ்சிபுரம்,விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleமீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! குழந்தைகள் மூலம் மனம் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!
Next articleவாய் துர்நாற்றமா! வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து சரி செய்யும் வழிமுறைகள் !!