9 மாவட்டங்களில் கனமழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

Photo of author

By CineDesk

9 மாவட்டங்களில் கனமழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட  அறிவிப்பு!!

வங்ககடலில் தென்கிழக்கு பகுதிகளிலும், அதை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. மேலும் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மே 10 ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்ககடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுபெறும்.

இந்த புயலானது, மே 11 ஆம் தேதி  வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய வங்ககடல் கிழக்கு பகுதிகளில் இந்த புயல் நிலவிடும். பிறகு வடக்கு, வடகிழக்கு பகுதிகளில் இருந்து வங்கதேசம்- மியான்மர் கடற்கரை நோக்கி நகர்கிறது.

இன்று உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில்  மே 10 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வரும் 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையின் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்த பட்சமாக 26–27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும்.