அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!!

Photo of author

By Rupa

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!!

Rupa

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!!

பொதுத்தேர்வு முடிந்து மாணவர்களுக்கு பள்ளி திறப்பு தேதியானது கோடை வெயிலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது கோடை வெயில் முடிந்து மழைக்காலம் ஆரம்பித்து விட்டது.

கடந்த இரு தினங்களாக கனத்த மழை பெய்து வந்ததால் சென்னை திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுப்பு அளித்தனர். ஆனால் இந்த ஆண்டு பள்ளி திறப்பு தேதியே சற்று தள்ளி வைக்கப்பட்டதால் பாடத் திட்டங்கள் விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகத்தான் பள்ளிக் கல்வித் துறை சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் நடத்த முடிவு செய்தது. அந்த வகையில் தற்பொழுது மழையின் காரணமாக அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் அதிகரிக்க தான் தொடங்கியுள்ளது.

இன்றும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எனவே பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் முன்னெச்சரிக்கையாக கட்டாயம் குடை மற்றும் ரெயின் கோட் எடுத்துச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்.