இணையத்தில் வைரலாகும் #Go BackStalin – மக்களிடையே வலுக்கும் தொடர் எதிர்ப்பு!!

0
217
#image_title

இணையத்தில் வைரலாகும் #Go BackStalin – மக்களிடையே வலுக்கும் தொடர் எதிர்ப்பு!!

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே பிகார் முதலமைச்சர் தற்பொழுது எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். அந்த வகையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி முதல்வர் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா மற்றும் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார்.

பீகார் முதல்வருக்கு ஸ்டாலின் இது குறித்து பதில் கடிதமும் அனுப்பினார் அதில் அவர் கூறியுள்ளதாவது, பாஜகவிடமிருந்து இந்தியாவை காப்பாற்ற மதசார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய நேரம் இதுதான்.

பாஜகவை வீழ்த்தினால் தான் இந்தியாவை நாம் மீட்க முடியும். அந்த வகையில் எதிர்க்கட்சிகள் அனைவரும் கலந்து கொள்ளும் நிலையில் நடைபெற போகும் இந்த கூட்டத்தில் கருணாநிதியின் பிரதிநிதியாக நான் பங்கேற்க உள்ளேன் என்றவாறு அவர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இவர் பீகாரர்க்கு வருவதற்கு முன்பாகவே கோ பேக் ஸ்டாலின் என்ற ஹேஷ்டேக் ஆக ஆரம்பித்துவிட்டது. ஏனென்றால் வட மாநிலத்தவர் தமிழகத்திற்கு வந்தால் அடித்து விரட்டுவதாகவும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு தமிழக அரசு வழங்காததால் ஸ்டாலின் இங்கே வரக்கூடாது என எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது.

நேற்று முதல் இந்த ஹேஷ்டேக் ஆனது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டும் இன்றி நேற்று நடைபெற்ற கலைஞர் கோட்டம் திறப்பு விழாவில் பீகார் முதல்வர் உடல் நலக்குறைவால் கலந்து கொள்ளவில்லை என்று கூறியது சற்று சந்தேகத்தை கிளப்பியுள்ளது.

ஆட்சி செய்யும் மாநிலத்தில் மக்கள் இவ்வாறு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் நாம் இவரோடு கைகோர்ப்பது சரிதானா என்ற எண்ணத்தில் இவர் அதில் கலந்து கொள்ளவில்லை என பலரும் கூறுகின்றனர்.