அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்கும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டு புயலாக மாறியது.அந்த புயலிற்கு மாண்டஸ் என்று பெயர்வைக்கப்பட்டது.அந்த புயலின் காரணமாக தமிழகம்,புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்தது.தமிழகத்தில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு அறிவித்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டனர்.
அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் இருந்துதான் மழையின் தாக்கம் குறைந்தது.அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கியது.இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த இரண்டு நாட்களுக்கும் டெல்டா பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை போன்ற பகுதிகளில் நேற்று முதலே கனமழை பெய்து வருகின்றது. இதனால் தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடரந்து கன்னியாகுமாரி, நெல்லை,தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.மேலும் தஞ்சை, நாக்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மிக கனமழைக்கு பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.