தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்!

Photo of author

By Parthipan K

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும்!

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தின் ஒருசில மாவட்டங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

நாளை (பிப்ரவரி 27) மற்றும் நாளை மறுநாள் (பிப்ரவரி 28) தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். தென் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக வருகிற 1-ந் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதனை தொடர்ந்து 2-ந் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, ராமநாதபுரம், புதுகோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நாளை மற்றும் நாளை மறுநாளில் தென்கிழக்கு வங்க கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளில் மணிக்கு நாற்பது முதல் ஐம்பது கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.