Breaking News

தமிழகம் முழுவதும் கனமழை எதிரொலி!! இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!!

தமிழகம் முழுவதும் கனமழை எதிரொலி!! இன்று நடைபெறவிருந்த பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைப்பு!!

தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த வாரங்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக தமிழக்தில் உள்ள அனைத்து நீர், நிலைகளும் நிரம்பி வரும் நிலையில் இன்னும் சில நாட்களுக்கு இந்த பருவமழையானது நீட்டிக்க கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு தெரிவித்து இருக்கிறது.

ஏற்கனவே இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் தொடர்ச்சியாக கனமழை பெய்தது.

அதன் பின்னர் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மேல் நிலவிய வளிமண்டல சுழற்சியால் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி கேரளா, தமிழகம், புதுவையை கனமழை வெளுத்து வாங்கியது.

இவ்வாறு பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று தமிழக்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் தமிழகத்தில் இன்று நடைபெற விருந்த பாலிடெக்னிக் கல்லூரிகளின் தேர்வும் ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. டிப்ளமோ தேர்வு, பட்டய தேர்வு, முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு ஐடிஐ மாணவர்களுக்கான தேர்வு அனைத்து தேர்வுகளும் ஒதுக்கவைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான தேதி https://dte.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.