தமிழகத்தில்  இந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

0
159

ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோர பகுதிகளில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தருமபுரி ,சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறியுள்ளது.

 

Previous articleசிகரெட் புகையிலை குட்கா போன்ற பொருளை பயன்படுத்துபவர்கள் இந்த ஊருக்கு வர தடை :! ஊர் பொதுமக்கள் உத்தரவு !!
Next articleஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் வினோத திருவிழா !!