ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் வினோத திருவிழா !! 

0
88

கமுதி பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்து கொண்ட திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த முதல்நாடு கிராமத்தில் நள்ளிரவில் காட்டுப்பகுதியில் எல்லை பிடாரி அம்மனாக கன்னிப்பெண்ணை பீடம் அமைத்து அம்மன் தெய்வத்திற்கு 60 ஆடுகள் பலியிட்டு ,பச்சரிசி சாதம் சமைத்து ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோதமான திருவிழாவிற்கு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.

முதல்கிராமத்தில் வசித்து வரும் மக்கள், தங்களது விளை நிலங்களை பயிரிட்ட விளைந்த நெல்லை, அரிசியாக்கி ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மூன்றாவது வாரத்தில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் திருவிழா கடந்த மூன்று தலைமுறையாக நடந்து வருகிறது .

இந்த வருடமும் பருவமழை பெய்து நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டுமென்றும், விவசாயிக்குஎந்தவித நோய் தாக்கமும் இன்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கொரோனா பரவலில் இருந்து மக்கள் மீண்டு வர வேண்டும் என்றும் வேண்டுகோளை வைத்து திருவிழாவில் மக்கள் நடத்தினர்.

நள்ளிரவில் பூஜையில் கலந்து கொள்ளும் ஆண்கள் அனைவருக்கும் பச்சரிசி சாதம், அசைவ விருந்து பிரசாதமாக வழங்கப்படும். மேலும் இந்த திருவிழாவிற்கு விருதுநகர், சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 5000-க்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு திருவிழா நடத்தப்பட்டது.

இந்த வழிபாட்டில் ஆண்கள் அந்த கிராம மக்களிடம் வீடு வீடாக சென்று பச்சரிசியை வாங்கி சமைத்து கன்னிப்பெண்ணை இடமாக அமைத்து பூஜை செய்து படையலிட்டு, பின்னர் அனைவரும் உண்பார்கள்.

மீதமுள்ளஉணவை அங்கேயே குழிவெட்டி புதைத்து விட்டு வெறும் கையோடு செல்வார்களாம்.

author avatar
Parthipan K