இரண்டு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!! சென்னை வானிலை மையம்!!
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஏற்கனவே தமிழகத்தில் ஜூலை 23 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவித்திருந்தார். அதனையடுத்து கோவை நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.
இந்த நிலையில் சென்னை வானிலை மையம் அறிவிப்பின் படி ஜூலை 19 ஆம் தேதி முதல் ஜூலை 25 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என்று அறிவித்துள்ளது. மேலும் மேற்கு திரை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து இன்றும் நாளையும் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மேலும் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கடலோர பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கும் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தி உள்ளது.
சென்னை வானிலை மையம் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகள், தென் இலங்கை கடலோர பகுதிகள், வங்கக் கடல் பகுதிகள், மத்திய வங்கக் கடல் பகுதிகளில் இன்று முதல் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்கள் அந்தமான் பகுதிகளுக்கும் அதையொட்டி உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.