ஊழல் செய்யும் திமுக அரசு!! பாஜக தலைவர் அண்ணமாலை குற்றச்சாட்டு!!

0
40
The corrupt DMK government!! BJP leader Annamalai accused!!
The corrupt DMK government!! BJP leader Annamalai accused!!

ஊழல் செய்யும் திமுக அரசு!! பாஜக தலைவர் அண்ணமாலை குற்றச்சாட்டு!!

கர்பிணிப் பெண்களின் நலனுக்காக தரக்கூடிய நிதியில் இப்படியெல்லாம் நடக்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசானது மாத்ரு வந்தனா என்னும் திட்டத்தை கர்பிணிப் பெண்களின் நலனுக்காக கொண்டு வந்தது.இதில், கர்பிணிப் பெண்களுக்கு ஐந்து தவணையாக ரூபாய் 14 ஆயிரம் தொகையும் மற்றும் ரூபாய் நான்காயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகமும் வழங்கப்படுகிறது.

இதற்காக வழங்கப்படுகின்ற நிதியில் அறுபது சதவிகிதம் மத்திய அரசு தரக்கூடிய நிதியுதவியாகும். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் மத்திய அரசானது ரூபாய் 257 கோடியை தமிழகத்துக்கு வழங்கி உள்ளது.

ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த நிதி உதவிகள் கர்பிணிப் பெண்களுக்கு வழங்கப்படவில்லை. இதை பாஜக அரசு வன்மையாக கண்டிப்பதாக கூறி உள்ளார்.

தமிழ்நாட்டில் ஊழல் ஆட்சியான திமுகவின் ஆட்சி வந்த பிறகுதான் இதெல்லாம் நடக்கிறது. முதலில் தாலிக்கு தங்கம் என்ற மகளிருக்கான திட்டத்தை முடக்கினார்கள்.

பட்டியல் பிரிவு மக்களுக்காக வழங்கிய நிதி உதவிகளை திருப்பி அனுப்பி விட்டார்கள். பள்ளி மாணவர்களை தேசிய விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்பாமல் அவர்களின் திறமையை கட்டி போட்டார்கள்.

அரசு மாணவர் விடுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தராமல் ஏமாற்றினார்கள். அந்த வகையில், தற்போது கர்பிணிப் பெண்களுக்கான நிதி உதவி திட்டத்தையும் இரண்டு ஆண்டுகளாக செயல்படுத்தாமல் இருக்கிறார்கள்.

இவ்வாறு ஊழல் செய்வதை நிறுத்தி விட்டு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாஜக தலைவர் அண்ணாமலை திமுக அரசுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

author avatar
CineDesk