தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிக்கை!

0
420
#image_title

தென் மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யும்! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிக்கை!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மீண்டும் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நெல்லை, திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற தென் மாவட்டங்களில் சில தினங்களுக்கு முன்னர் கனமழை பெய்தது. இதனால் தென் மாவட்டங்களில் முழுவதும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு மக்கள் மழை வெள்ளத்தில் தத்தளித்தனர். தென் மாவட்டங்களில் ஒரு நாளில் பெய்த கனமழையால் தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இதற்கு மத்தியில் மீண்டும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் அவர்கள் கூறியுள்ளார்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கிழக்கு திசையில் வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று(டிசம்பர்28) தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை(டிசம்பர்29) தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதே போல டிசம்பர் 30ம் தேதி தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

டிசம்பர் 31ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாமைரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிசு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

ஜனவரி 1 மற்றும் ஜனவரி 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் மழை பெய்தது எதுவும் பதிவாகவில்லை.

இன்று(டிசம்பர் 28) குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 29ம் தேதி குமரிக்கடல் பகுதிகள், தென்கிழக்கு மற்றும் அதனை வீட்டிய தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

டிசம்பர் 30 மற்றும் டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தபடுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Previous articleராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம்! ஜனவரி 14ம் தேதி முதல் மீண்டும் தொடக்கம்!
Next articleகேப்டன் விஜயகாந்த காலமானார்..!! பேரதிர்ச்சியில் தொண்டர்கள்!