மோசமான மூல நோயை கூட ஒரே வாரத்தில் குணமாக்கும் பெருங்காயம்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

Photo of author

By Divya

மோசமான மூல நோயை கூட ஒரே வாரத்தில் குணமாக்கும் பெருங்காயம்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

ஆசனவாய் பகுதியில் உள்ள இரத்த குழாயில் வீக்கம் ஏற்பட்டால் மூல நோய் உருவாகும்.அதாவது மலம் கழிக்கும் பொழுது ஆசனவாய்க்கு அழுத்தம் கொடுத்தல்,மலச்சிக்கல்,நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்திருத்தல் போன்ற பல காரணங்களால் ஆசனவாய் இரத்த குழாயில் அழுத்தம்,வீக்கம் ஏற்படுகிறது.

இந்த இரத்த குழாய் வெடிக்கும் பொழுது அவை இரத்த கட்டிகளாக உருவெடுத்து மூல நோய் புண்களாக மாறுகிறது.ஆசனவாய் பகுதியில் உள்ள மூல நோய் புண்களை குணமாக்க பெருங்காயம் + சீரகத்தை பொடித்து நீரில் போட்டு காய்ச்சி குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)பெருங்காயம்
2)சீரகத் தூள்

செய்முறை:-

முதலில் ஒரு கட்டி பெருங்காயத்தை வாணலியில் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.பெருங்காயம் கருகிட கூடாது.நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதேபோல் 5 தேக்கரண்டி சீரகத்தை வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த இரண்டு பொருளையும் ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு பொடித்துக் கொள்ளவும்.அரைத்த பொடியை ஒரு டப்பாவில் போட்டு பத்திரப்படுத்துக் கொள்ளவும்.

பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.2 நிமிடங்கள் தண்ணீர் சூடானதும் அடுப்பை அணைத்து நீரை ஒரு கிளாஸிற்கு ஊற்றிக் கொள்ளவும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ள பெருங்காயம் + சீரகப் பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து கலந்து குடித்து வந்தால் ஒரே மாதத்தில் மூல நோய் புண்கள் ஆறிவிடும்.