முதுகு மூட்டு மற்றும் கை கால் வலியை குணமாக்கும் மூலிகை தைலம்!! இதை செய்ய 4 பொருட்கள் போதும்!!

Photo of author

By Divya

முதுகு மூட்டு மற்றும் கை கால் வலியை குணமாக்கும் மூலிகை தைலம்!! இதை செய்ய 4 பொருட்கள் போதும்!!

இன்று பள்ளி செல்லும் பிள்ளைகள் கூட முதுகு,மூட்டு மற்றும் கை கால் வலி ஏற்படுகிறது.இதற்கு முக்கிய காரணம் உணவுமுறை பழக்கம் தான்.அது மட்டும் இன்றி உடல் நலக் கோளாறு இருந்தாலும் இந்த பாதிப்புகள் ஏற்படும்.

எனவே முதுகு.மூட்டு,கை கால் வலியை முழுமையாக குணமாக்கி கொள்ள இந்த தைலத்தை தடவி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)சுத்தமான தேங்காய் எண்ணெய்
2)விராலி இலை
3)லெமன் கிராஸ்
4)கருஞ்சீரகம்

செய்முறை:

ஒரு கைப்பிடி அளவு விராலி இலையை நீரில் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளவும்.இதை வெயிலில் காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதேபோல் ஒரு கைப்பிடி அளவு லெமன் கிராஸை பொடியாக நறுக்கி வெயிலில் காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு இரும்பு வாணலி வைத்து ஒரு கப் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணையாக இருந்தால் இன்னும் சிறப்பு.

தேங்காய் எண்ணெய் சூடானதும் அதில் வெயிலில் உலர்த்தி வைத்துள்ள விராலி இலை மற்றும் லெமன் கிராஸை போடவும்.பிறகு 1/4 கப் கருஞ்சீரகத்தை போட்டு மிதமான தீயில் 15 நிமிடங்களுக்கு கொள்ளவும்.

இந்த எண்ணெயை ஆறவிட்டு ஒரு ஈரமில்லாத பாட்டிலுக்கு வடிகட்டி சேமித்துக் கொள்ளவும்.இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் இந்த எண்ணெயை முதுகு,மூட்டு,கை கால்களில் தடவி மசாஜ் செய்து படுக்கவும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் முதுகு,மூட்டு,கை கால் வலி மாயமாகும்.