இனிமேல் போலீசார் இதை பயன்படுத்த தடை!! போலீஸ் கமிஷனர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!
இனிமேல் பணியில் இருக்கும் பொழுது போலீசார் யாரும் இதை பயன்படுத்தக் கூடாது என போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது பற்றி சந்திப் ராய் ரத்தோர் தனது செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
காவலர்கள் முக்கியமான பாதுகாப்பு பணியில் அதாவது விஐபி பாதுகாப்பு பணியில் இருக்கும் பொழுது அலைபேசியை பயன்படுத்தக் கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்.
அடுத்ததாக சாலைகளில் போக்குவரத்து வாகனங்களை நெரிசல் இல்லாமல் ஒழுங்குபடுத்தும் போதும் செல்போன் உபயோகப்படுத்தக் கூடாது. மேலும் விதிமுறைகளை மீறுபவர்களை கண்காணித்துக் கொண்டிருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்த அனுமதி இல்லை.
இந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் பொழுது செல் போன் பேசினால் நமது கவனம் சிதறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே மேற்கண்ட பணிகளில் இருக்கும் பொழுது செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
அடுத்ததாக சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுதும், கோவில் திருவிழாக்கள், முக்கியமான போராட்டங்களின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் பொழுதும், அலைபேசியில் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களை உயர் போலீஸ் அதிகாரிகள் தங்களுக்கு கீழ் பணி புரியும் காவலர்களுக்கு அறிவுரையாக வழங்க வேண்டும். மேலும் மேற்கண்ட தகவல்களை ஒவ்வொரு காவல் நிலையத்தில் அறிவிப்பு பலகைகளிலும் எழுதி வைக்க வேண்டும்.
அதேபோல் காவலர்களுக்கு நடைபெறும் காலை நேர அணிவகுப்பின் போதும் உயர் அதிகாரிகள் இதனை கூற வேண்டும். போன்ற கட்டுப்பாடுகளை சென்னை போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
அதற்கு முன்னதாக சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் காலை வந்து தனது அன்றாட பணிகளை கவனித்தார். மேலும் எட்டு மாடிகளிலும் உள்ள அலுவலர்கள் சந்தித்து பணிகளைப் பற்றி விசாரித்ததோடு கேண்டின் சாப்பாடு தரமாக உள்ளதா? எனவும் விசாரித்தார்.
அடுத்ததாக பொதுமக்கள் குறை கேட்கும் அறைக்கு சென்று அவர்களின் மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார். அவருக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதிலும் அளித்தார்.