இப்படி இருந்தால் பொதுமக்கள் எப்படி வருவார்கள்?? சுகாதார செயலாளரிடம் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!! 

0
59

இப்படி இருந்தால் பொதுமக்கள் எப்படி வருவார்கள்?? சுகாதார செயலாளரிடம் கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம்!! 

மருத்துவமனை கட்டிடங்கள் இந்த நிலையில் இருந்தால் பொதுமக்கள் எப்படி வருவார்கள் என சுகாதாரத்துறை செயலாளரிடம் ஹை கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

இது பற்றிய செய்தியின் விவரம் பின்வருமாறு,

மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர்,  தாக்கல் செய்த மனுவில், ராமநாதபுரத்தில் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள துணை சுகாதார நிலையத்தின் மிகவும் கட்டடம் மோசமான நிலையில் இருப்பதாகவும், அதனை இடித்துவிட்டு புதிய சுகாதார நிலையம் கட்ட உத்தரவிட வேண்டும்  எனவும் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதையடுத்து இந்த வழக்கானது விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையின் போது ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி குறை கூறப்பட்டிருந்த மருத்துவமனை கட்டடத்தை நேரில் ஆய்வு செய்து முறையான அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவு பேரில் மருத்துவமையை நேரில் சென்று ஆய்வு செய்த நீதிபதி, அதன் அறிக்கையை புகைப்படங்களுடன் இன்று  மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு பார்வையிட்ட நீதிபதிகள், மருத்துவமனை கட்டிடம் இவ்வளவு மோசமான நிலையில் உள்ளது. இந்தப் புகைப்படம் அதனை பிரதிபலிக்கிறது. மாவட்ட நீதிபதியின் அறிக்கையும் அதனையே சுட்டிக் காட்டுகிறது. இது தொடர்பாக ஏன் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார். 

அரசுக்கு சொந்தமான மருத்துவமனை இதுபோன்ற மோசமான நிலையில் இருந்தால் எப்படி மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள்,  மருத்துவம் பார்ப்பதற்கு அந்த மருத்துவமனைக்கு வருவார்கள். எனக் கேள்வி எழுப்பிய ஐகோர்ட் நீதிபதிகள் மாவட்ட நீதிபதியின் அறிக்கையை புகைப்படங்களுடன் மருத்துவத்துறை செயலாளருக்கு அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பாக விசாரணைகளுக்கு மருத்துவத்துறை செயலாளர் காணொளி காட்சி வாயிலாக வருகின்ற ஆறாம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.