ஹெபடைடிஸ்- பி தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும்!! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தற்போது உலகம் முழுவதும் ஒன்றின் பின் ஒன்றாக ஏராளமான நோய்கள் பரவிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் ஹெபடைடிஸ்- பி வகை கல்லீரல் அலர்ஜி அதிகரித்துள்ளது.
இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த நோயை முழுவதுமாக குணமாக்க ஹெபடைடிஸ்- பி தேசிய ஒழிப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் இதற்கான மூன்று தவணை தடுப்பூசியை உடனடியாக செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது.
இந்த அறிவிப்பை தொடர்ந்து மொத்தம் 28 சதவிகித மருத்துவப் பணியாளர்கள் இந்த தடிப்பூசியை போட்டுள்ளனர். எஞ்சி உள்ளவர்கள் இந்த தடுப்பூசி போடுவது குறித்து எந்த ஒரு ஆர்வத்தையும் காட்டிக் கொள்ளவில்லை.
எனவே, எஞ்சி உள்ள 72 சதவிகித மருத்துவப் பணியாளர்கள் இந்த ஹெபடைடிஸ்- பி வகை தடுப்பூசியை உடனடியாக போட்டுக் கொள்ளுமாறு ஹெபடைடிஸ்- பி தேசிய ஒழிப்பு திட்டம் கூறி உள்ளது.