அதிபர் தேர்தலில் போட்டியிட தனது மகளுக்கும் தகுதி உள்ளது

0
116

அமெரிக்க தேர்தலில் தற்போது பிரசாரம் சூடு பிடித்துள்ளது. டிரம்ப் மீது ஜோபிடன், கமலா ஹாரீஸ் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். அதே போல் டிரம்பும் ஜோபிடன், கமலாஹாரீஸ் மீது விமர்சனங்களை முன் வைத்து வருகிறார். இதற்கிடையே 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் கமலா ஹாரீஸ் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் கமலா ஹாரீஸ் திறமையில்லாதவர். அவரை விட அதிபர் தேர்தலில் போட்டியிட தனது மகள் இவாங்கா தகுதியானவர் என்று கூறியுள்ளார்.
நியூஹாம்ஸ்பியரில் நடந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியபோது நாட்டின் அதிபராக இதுவரை ஒரு பெண் கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை. அமெரிக்க அதிபராக ஒரு பெண் வருவதை நான் விரும்புகிறேன். ஆனால் அது கமலாஹாரீஸ் அல்ல. அவருக்கு அதற்கான தகுதி கிடையாது.

அவரது கட்சியில் அதிபர் வேட்பாளருக்கான தேர்தலில் அவரும் களம் குதிக்கிறார். ஆனால் அவரது செல்வாக்கு குறைந்து இருந்தது. ஒருசில மாகாணங்களில் நடந்த முதன்மை தேர்தலிலேயே அவரது ஆதரவு ஒன்றை இலக்கத்துக்கு சென்று விட்டது. அவர் அழகாக இருக்கிறார். வெறும் அழகு மட்டுமே இருந்தால் அதிபராக முடியுமா? 2024-ம் ஆண்டு அதிபர் தேர்தலில் கமலாஹாரீசை விட என் மகள் இவாங்கா டிரம்ப் போட்டியிட தகுதியானவர். இவாங்கா அதிபராக வேண்டும் என்று மக்கள் கூறுகிறார்கள். அவர்களை குறை சொல்ல மாட்டேன். இவாங்கா சிறந்த வேட்பாளராக இருப்பார் என்று கூறினார்.

Previous articleமீண்டும் அதிபராக இவருக்கே வாய்ப்பு அதிகம்
Next articleஇந்த நாட்டில் வரலாறு காணாத மழை?