சுவாசக் குழாயில் படிந்து கிடக்கும் சளியை வேரோடு அகற்ற உதவும் மூலிகை தூபம்!! இருவேளை செய்தாலே முழு பலன் கிடைக்கும்!

Photo of author

By Divya

சுவாசக் குழாயில் படிந்து கிடக்கும் சளியை வேரோடு அகற்ற உதவும் மூலிகை தூபம்!! இருவேளை செய்தாலே முழு பலன் கிடைக்கும்!

சளி பிடிப்பது என்பது சாதாரண ஒரு பாதிப்பு தான்.இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும்.மழைக்காலம்,காலநிலை மாற்றம்,காய்ச்சல்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் போன்ற பல காரணங்களால் சளி பிடிக்கிறது.

இந்த பாதிப்பை மருந்து மாத்திரை இன்றி கசாயம்,மூலிகை டீ,மூலிகை மாத்திரை,ஆவி பிடித்தல் உள்ளிட்ட பல வழிகளில் குணப்படுத்திக் கொள்ளலாம்.அந்த வகையில் அதிக செலவின்றி எளிதில் சளி தொல்லையை குணமாக்கி கொள்ள மூலிகை தூபம் போடலாம்.இந்த மூலிகை தூபத்தை முகர்ந்து பார்த்தால் சுவாசப் பாதையில் படிந்து கிடக்கும் சளி முழுமையாக கரைந்து வெளியேறும்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு – ஒரு ஸ்பூன்
2)பிரியாணி இலை – இரண்டு
3)இலவங்கம் – ஐந்து
4)ஏலக்காய் – ஒன்று
5)மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
6)அதிமதுரம் – ஒரு ஸ்பூன்
7)கல் உப்பு – அரை ஸ்பூன்
8)பட்டை – ஒரு துண்டு
9)கருப்பு எள் – அரை ஸ்பூன்
10)கடுகு எண்ணெய் – ஒரு ஸ்பூன்
11)டிஸ்யூ பேப்பர் – ஒன்று

செய்முறை:-

மிளகு,பிரியாணி இலை,ஏலக்காய்,இலவங்கம்,மஞ்சள் தூள்,அதிமதுரம்,கல் உப்பு,பட்டை,கருப்பு எள் ஆகியவற்றை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

இந்த பவுடரை ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளவும்.பிறகு ஒரு ஸ்பூன் கடுகு எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்.அதன் பின்னர் ஒரு டிஸ்யூ பேப்பர் எடுத்து அதில் இந்த பவுடரை கொட்டி மூட்டை போல் மடக்கி கொள்ளவும்.

பின்னர் இதை பற்ற வைத்து தூபம் போடவும்.இந்த புகையை முகர்ந்து பார்த்தால் சுவாசக் குழாயில் படிந்து கிடந்த சளி முழுமையாக கரைந்து வெளியேறும்.

உணவு உட்கொண்ட பின்னர் அல்லது இரவு தூங்கச் செல்வதற்கு முன் இந்த தூபத்தை போடலாம்.இவ்வாறு செய்வதினால் உடலில் தேங்கிய சளி முழுமையாக கரைந்து வெளியேறி விடும்.