பல் சொத்தை மஞ்சள் கறை நீங்க உதவும் ஹெர்பல் டூத் பேஸ்ட்!! இதை இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்!!

Photo of author

By Divya

பல் சொத்தை மஞ்சள் கறை நீங்க உதவும் ஹெர்பல் டூத் பேஸ்ட்!! இதை இனி வீட்டிலேயே தயார் செய்யலாம்!!

உங்களில் பலருக்கு பற்களில் மஞ்சள் கறை,பல் சொத்தை,ஈறு வீக்கம்,வாய் துர்நாற்ற பிரச்சனை இருக்கும்.இதை சரி செய்து கொள்ள ஹெர்பல் டூத் பேஸ்ட் பயன்படுத்துங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வேப்பிலை – 4 கொத்து
2)உப்பு – 1/2 தேக்கரண்டி
3)இலவங்கம் – 5
4)பட்டை – 1 துண்டு
5)மாசிக்காய் பொடி – 3 தேக்கரண்டி
6)புதினா இலை பொடி – 3 தேக்கரண்டி

மாசிக்காய் பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.25 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.

செய்முறை:-

முதலில் 4 கொத்து வேப்பிலை,4 தேக்கரண்டி புதினா இலையை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து காய வைத்த புதினா மற்றும் வேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளவும்.அதன் பின்னர் மிக்ஸி ஜாரில் ஒரு துண்டு பட்டை,5 இலவங்கம்,சிறிது உப்பு சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இதை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள வேப்பிலை,புதினா பொடியில் கலக்கவும்.பிறகு நாட்டு மருந்து கடையில் வாங்கிய மாசிக்காய் பொடியை சேர்த்து கலந்தால் மூலிகை பற்பொடி தயார்.

பயன்படுத்தும் முறை:-

ஒரு கிண்ணத்தில் அரைத்த மூலிகை பற்பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்க்கவும்.பிறகு அதில் 1/4 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் மற்றும் 1/4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்டாகவும்.

இந்த பேஸ்டை பல் துலக்கும் பிரஷில் வைத்து பற்களை நன்கு துலக்கி எடுக்கவும்.காலை,இரவு என இருவேளை இந்த மூலிகை பேஸ்டை வைத்து பற்களை துலக்கி வந்தால் பல் சொத்தை,ஈறு வீக்கம்,வாய் துர்நாற்றம் ஆகியவை சரியாகும்.