ராமேஸ்வரம் மீனவர்கள் நல மாநாட்டில் முதல்வரின் சிறப்பு அறிவிப்புகள் இதோ!!

Photo of author

By Parthipan K

ராமேஸ்வரம் மீனவர்கள் நல மாநாட்டில் முதல்வரின் சிறப்பு அறிவிப்புகள் இதோ!!

ராமேஸ்வரம் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவர்கள், மீனவர் நலத் திட்டங்களை அறிவித்துள்ளார். இன்றைய தினம் 14 ஆயிரம் பயனாளிகள் பயன்பெறும் வகையில் 88 கோடியே 90 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் இந்த விழாவின் மூலமாக கொடுக்கப்பட இருப்பதாகவும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

 

அவர் அறிவித்தவற்றை பார்க்கலாம்,

 

மீனவர்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 5 ஆயிரத்து 35 பேருக்கு வீடுகளுக்குப் பட்டா வழங்கப்படும். 45 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தொழிலுக்கான கூட்டுறவுக் கடன் வழங்கப்படும்.

 

மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகை இதுவரை 5 ஆயிரம் ரூபாயாக இருந்தது. இனி 8 ஆயிரம் ரூபாயாக அது வழங்கப்படும். இந்த நிவாரணத் தொகையை 1 லட்சத்து 79 ஆயிரம் பேர் பெற இருக்கிறார்கள்.

 

60 வயதுக்கு மேற்பட்ட மீனவர்கள் 15 ஆயிரம் பேருக்கு மீன்பிடி தடைக் காலத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும். 1000 நாட்டுப் படகு மீனவர்களுக்கு, 40 விழுக்காடு மானியத்தில் இயந்திரங்கள் வழங்கப்படும்.

 

தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் குமரி மாவட்டங்களைச் சேர்ந்த பதிவு செய்யப்பட்ட நாட்டுப்படகு உரிமையாளர் களுக்கு தற்போது மானிய விலையில் வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவானது 3400 லிட்டரிலிருந்து 3700 லிட்டராக உயர்த்தி வழங்கப்படும்.

 

தங்கச்சிமடம் மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள் ளும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. குந்துகால் மீன் இறங்குதளத்தை மேம்படுத்த ஆய்வுப் பணிகளையும் தொடங்கி இருக்கிறோம் என்று முதல்வர் ஸ்டானின் கூறினார்.

 

மீனவன் நலத்திட்டங்கள் ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் அறிவிக்கப்படுகிறது. ஆனால் சரியாக செயல்படுத்துவதில்லை என மீனவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தற்போது அறிவித்துள்ள மீனவர் நல திட்டங்களை முறையாக விரைந்து செயல்படுத்த வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்