நம் பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க சிக்கன வழிகள் இதோ!!
1)வீடு வாடகைக்கு இருப்பவர்கள் நகரப் பகுதிகளில் இருந்து சற்று அவுட்டர் ஏரியாவில் வீடு பார்த்தால் வாடகை 500 முதல் 1000 வரை குறைக்க முடியும்.
2)காலையில் வாக்கிங் செல்லும் பொழுதே வீட்டிற்கு தேவைப்படும் பால், காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களை வாங்கி வந்து விடுங்கள். இல்லையெனில் மளிகை செலவு செய்வதற்கு என்று பைக் எடுத்து செல்வதினால் பெட்ரோல் செலவு அதிகமாகும்.
3)வீட்டில் தேவையில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் மின் சாதனங்களை அணைத்து வைத்தாலே பாதி கரண்ட் பில் மிச்சம் செய்து விடலாம்.
4)ஹோட்டலில் உணவு வாங்குவதை தவிர்த்து வீட்டில் சமைத்து சாப்பிடுவதன் மூலம் பணம் மிச்சமாகும்.
5)தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதினால் மோட்டார் போடும் அளவு குறைக்காலம். மோட்டார் ஓடுவது குறைந்தாலே கரண்ட் பில் வெகுவாக குறையும்.
6)ரேசன் கடைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவதால் மாதம் 600 ரூபாய் வரை சேமிக்க முடியும்.
7)வேலைக்கு செல்பவர்கள் தினமும் கடையில் டீ, காபி வாங்கி குடிக்காமல் அவற்றை வீட்டிலேயே தயார் செய்து பிளாஸ்க்கில் ஊற்றி எடுத்து சென்றால் வெளியில் வாங்கி பருகும் செலவு மிச்சமாகும்.