அடேங்கப்பா! தினமும் வெறும் வயிற்றில் பூண்டு பால் பருகுவதால் நம் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

0
101
#image_title

அடேங்கப்பா! தினமும் வெறும் வயிற்றில் பூண்டு பால் பருகுவதால் நம் உடலுக்கு இத்தனை நன்மைகள் கிடைக்குமா!!

நம் தினசரி உணவில் பூண்டின் பயன்பாடு இன்றியமையாதது. இந்த பூண்டு உணவின் சுவையை கூட்டுவதிலும் நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகிறது.

பூண்டில் உள்ள சத்துக்கள்:-

வைட்டமின் பி6,கால்சியம்,காப்பர்,மெக்னிசியம்,வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.அதுமட்டுமின்றி அலிசின்,அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட்,சிஸ்டீன் சல்ஃபாக்சைடு உள்ளிட்டவையும் நிறைந்துள்ளது.

அதேபோல் தினமும் 1 கிளாஸ் பால் அருந்துவதால் உடல் பல ஆரோக்கிய நன்மைகளை பெறும்.

பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்:-

*புரதம்

*கொழுப்பு

*கால்சியம்

*மக்னீசியம்

*மாவுச்சத்து

அதிக மருத்துவ குணம் கொண்ட இந்த பால் + பூண்டை தினமும் வெறும் வயிற்றில் பருகுவதன் மூலம் உடல் பல ஆரோக்கிய நன்மைகளைபெற முடியும்.

பூண்டு பால் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்:-

*பூண்டு – 1 பல்

*பால் – 1 டம்ளர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் பால் ஊற்றவும். பின்னர் 1 பல் பூண்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் சேர்த்து கொதிக்க விடவும். 1 கிளாஸ் பால் 3/4 கிளாஸ் என்று வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இந்த பாலை ஒரு கிளாஸில் ஊற்றி பருகவும்.

குறிப்பு:-

*இந்த பூண்டு பாலை தினமும் வெறும் வயிற்றில் பருகினால் உடலுக்கு அதிகளவு நன்மைகள் கிடைக்கும்.

*இந்த பாலில் சுவைக்காக சர்க்கரை, வெல்லம் என்று எந்த இனிப்பு பொருளும் சேர்க்கக் கூடாது.

பூண்டு பால் அருந்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:-

**உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி வழங்குவதில் பூண்டு பால் சிறந்த தீர்வாக இருக்கும்.

**நீரிழவு நோய் இருப்பவர்கள் தினமும் பூண்டு பால் பருகி வருவதன் மூலம் அந்நோயை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

**பூண்டு பால் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.

**வாயுத் தொல்லை இருப்பவர்களுக்கு பூண்டு பால் சிறந்த தீர்வாக இருக்கும்.

**தினமும் பூண்டு பால் சாப்பிட்டு வருவதன் மூலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு முழுவதுமாக கரைந்து விடும். அதுமட்டும் இன்றி இதயத்தில் படிந்து கிடக்கும் கொழுப்புகளை கரைத்து வெளியேற்றவும் பூண்டு பால் பெரிதும் உதவுகிறது.

**அதேபோல் இரத்தத்தை சுத்தப்படுத்தி இரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது.உடலில் புற்று நோய் செல்கள் உருவத்தையும் தடுக்கிறது.

**முகப்பரு பாதிப்பு நீங்க தினமும் பூண்டு பால் பருகி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும்.