இதோ உனக்கு நான் சிறுநீர் அபிஷேகம் செய்கிறேன்.. பாஜக நிர்வாகியின் மனிதாபிமற்ற செயல் – கண்டனம் தெரிவிக்கும் பிரபல நடிகை!!

இதோ உனக்கு நான் சிறுநீர் அபிஷேகம் செய்கிறேன்.. பாஜக நிர்வாகியின் மனிதாபிமற்ற செயல் – கண்டனம் தெரிவிக்கும் பிரபல நடிகை!!

பாஜக ஆட்சியில் இருக்கும் பட்சத்தில் அவர்களது நிர்வாகிகள் குற்றச்சாட்டுகள் செய்தாலும் எந்த ஒரு செய்தியும் துளி அளவு கூட வெளியே வர விடுவதில்லை. அந்த வகையில் மூன்று மாதத்திற்கு முன் நடந்த சம்பவமானது தற்பொழுது வெளி உலகத்திற்கு வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலத்தின் சித்தி என்ற தொகுதியில் பாஜக எம்எல்ஏவாக கேதர்நாத் சுக்லா உள்ளார். ரமேஷ் சுக்லா என்பவர் இந்த எம்எல்ஏவின் பிரதிநிதியாக உள்ளார்.

இந்த பிரதிநிதியானவர் பழங்குடியின இளைஞர் ஒருவரிடம் மனிதாபிமானம் இன்றி நடந்து கொண்டுள்ளார்.அதாவது மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரிடம் சிகரெட் பிடித்தப்படியே அவரின் மீது சிறுநீர் கழித்துள்ளார். இவர் அவ்வாறு செய்தது வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது மூன்று மாத காலமாக வெளியே வரவில்லை. தற்பொழுதுதான் அந்த வீடியோவானது வெளியே கசிந்துள்ளது.

அந்த பாஜக எம்எல்ஏ பிரதிநிதி மீது பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியுள்ளதாவது, திருநங்கைகள் கூட இவ்வாறான செயலை ஒருபொழுதும் செய்யாது, எம்எல்ஏ பிரதிநிதியாக இருப்பதால் இவ்வாறு அவர் செய்யலாமா?? இந்த மனிதாபிமானமற்ற எம்எல்ஏவின் பிரதிநிதி முறையாக தண்டிக்கப்படுவாரா என கேள்வி எழுப்பி உள்ளார்.

ஆனால் இந்த வீடியோவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் தான் இணையத்தில் வெளியிட்டார். வெளியிட்டது மட்டுமின்றி முதலமைச்சரையும் டேக் செய்துள்ளார். இதனை கண்ட முதலமைச்சர் மனநலம் பாதிக்கப்பட்டவரிடம் இவ்வாறு நடந்து கொண்ட எம்எல்ஏ பிரதிநிதி மீது கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஆனால் தற்பொழுது வரை எந்த ஒரு நடவடிக்கையும் அந்த நிர்வாகி மீது எடுக்கவில்லை. எனவே அதனை சுட்டிக்காட்டி நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளது சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.