வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ..!!

Photo of author

By Divya

வீட்டில் பண வரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ..!!

பரிகாரம் 01:

பரிகாரம் செய்ய முதலில் ஒரு பச்சை கலர் பட்டு துணி எடுத்து அதில் வாசனை நிறைந்த ஜவ்வாது தூள் போட்டு தேய்த்து கொள்ளவும். இந்த பட்டு துணி மேல் திருநீற்றை தடவி அதில் 1 ஏலக்காய், 1/4 தேக்கரண்டி சோம்பு, சிறு துண்டு பச்சை கற்பூரம் போட்டு சிறு மூட்டையாக கட்டிக் கொள்ளவும்.

இந்த மூட்டையை விநாயக கடவுள் முன் வைத்து வருமானம் பெருக வேண்டுமென்று மனத்தில் நினைத்து வேண்டிக் கொள்ளவும். அடுத்து தங்களுக்கு பிடித்த கடவுள் முன் வைத்து வேண்டிக் கொள்ளவும். பின்னர் இந்த மூட்டையை வீட்டில் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். சம்பளம் வாங்கிய உடன் இந்த மூட்டை பக்கத்தில் பணத்தை வைத்து விட்டு மறுநாள் எடுத்து அத்தியாவசிய செலவுகளை மேற்கொள்ளவும். இவ்வாறு செய்தால் வீட்டில் பணக் கஷ்டம் நீங்கி அதன் வரவு அதிகரிக்கும்.

பரிகாரம் 02:

முதலில் வீட்டு பூஜை அறையை நன்கு சுத்தம் செய்து கொள்ளவும். பின்னர் தலைக்கு குளித்து விட்டு பூஜை அறைக்குள் நுழையவும். அங்கு ஒரு வெள்ளை காட்டன் துணி எடுத்து மஞ்சள் பூசிக் கொள்ளவும்.

பின்னர் அதில் எடுத்து வைத்துள்ள சோம்பு, ஏலக்காய், பச்சை கற்பூரம் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் 1 குப்பை மேனி வேர் எடுத்து அதில் மஞ்சள் குங்குமத்தில் பொட்டு வைத்து மற்ற பொருட்களுடன் சேர்த்து ஒரு சிறிய மூட்டை போல் கட்டி கொள்ளவும்.

பின்னர் கடவுள் படங்கள் பக்கத்தில் வைத்து பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளவும். மூட்டையில் உள்ள பொருட்களின் வாசம் குறைந்து விட்டால் மீண்டும் மாற்றி வைக்க வேண்டும். இவ்வாறு செய்து வருவதன் மூலம் வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.