வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம் இதோ..!!

Photo of author

By Divya

வீட்டில் பணம் சேர்ந்து கொண்டே இருக்க எளிய பரிகாரம் இதோ..!!

பரிகாரம் 01:

இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.

ஒரு கண்ணாடி கிளாஸில் தண்ணீர் நிரப்பி ஒரு பழுத்த எலுமிச்சம் பழத்தை அதில் போடவும். இதை வீட்டின் வட கிழக்குப் பகுதியில் வைக்கவும். வாரத்தில் இரண்டு முறை இதை மாற்றி புதிதாக வைக்கவும். அதாவது வெள்ளி அல்லது செவ்வாய் அன்று மாற்றவும்.

தண்ணீரை வீட்டின் வெளியே ஓரமாக ஊற்றவும். பழத்தை வீட்டின் வெளியே குப்பையில் போடவும்.

2 மாதங்களுக்கு தொடர்ந்து செய்து வர நிச்சயம் நல்ல முன்னேற்றம் பிறக்கும்.

பரிகாரம் 02:

இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும்.

ஒரு சிறிய அகல் விளக்கில் கல் உப்பு போட்டு நிரப்பி வைத்துக் கொள்ளவும். பின்னர் அதன் மீது விரலி மஞ்சள் கிழங்கு ஒன்றை குறுக்கு வாட்டில் வைத்துப் பூஜை அறையில் வைக்கவும்.

பிறகு, மஞ்சளுக்கு, விளக்கிற்கும் மஞ்சள், குங்குமம் வைத்து ஊதுபத்தி, கற்பூரம் காட்டி வணங்கவும்.

அடுத்த வெள்ளியன்று புதிதாக மாற்றவும். பழைய உப்பை பாத்திரம் கழுவும் சிங்கில் ஊற்றித் தண்ணீரில் கரைத்து விடவும். கிழங்கை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து சமையலுக்கு பயன்படுத்தலாம். அகல் அதே உபயோகிக்கலாம். 2 மாதங்கள் தொடர்ந்து செய்து வர நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.